\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நயாக்கிரா பெருங்குகை

அமெரிக்காவின்  பெருங்குகைகளில் ஒன்றான நயாக்கிரா

எமது மாநிலத்தில் அமெரிக்க  நாட்டின் பிரபலமான பத்துக் குகைகளில் ஒன்று, இரட்டை நகரங்களிலிருந்து மூன்று மணி நேரக் கார் பயணத் தொலைவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

NiagraCave1_520x371இயற்கையில் குகைகள் என்பது உயர்ந்த மலைகளிலும், மலை அத்திவாரத்திலும், மேலும் நிலத்திலே துளையாக உள்ள பாதாளம்  போன்றும் பலவகைப்பட்டது. பொதுவாக எல்லாக் குகைகளும் இவற்றின் ப்ரதான அம்சமான ஒன்றில் வகைப்படுத்தப்படும்.

ஆயினும் மினசோட்டா மாநிலத்தின்  நயாக்கிரா குகையோ பல்வேறு குணாதிசயங்களையும் உட்கொண்டது. அமெரிக்கக் கண்டங்களில் நாம் குகை என்று கூறினால் பெரும்பாலானோர் குகையின் கூரையில் இருந்து  விழும் சுண்ணாம்பு சார்ந்த சரலாகிமையிற் Stalamite சுரப்பியினாலான  அரண் தூண்களையே யோசிப்பர்.  காரணம், இவற்றைத் தாம் நாம் பொதுவாகத் திரைப்படங்களில் காண்கிறோம். எனினும் இயற்கைக் குகையாகிய நயாக்கிராக் குகையை அவதானித்தோமானால் அதன் அழகிய இயற்கை தோற்பாடுகள் விபரமாகத் தெரியவரும். நயாக்கிராக் குகை பல மில்லியன் ஆண்டுகளிற்கு மேற்பட்டது. அவ்விடம் பண்டைய உலகின் கடல்பரப்பு, பெரும் உறைபனி காலம் தோன்றுவதற்கு முன்பிருந்த அமெரிக்கக் கண்டத்தின் தோற்றம், அந்தக் காலங்களில் வாழ்ந்த உயிரினங்களின் படிமங்கள் எனப் பல வியத்தகு விஷயங்களை அறியமுடியும்.

NiagraCave6_520x371குகையின்  உச்சியிலும், பக்கங்களிலும் வித விதமான சுண்ணாம்பு, மற்றும் தாதுப் பொருட்கள் சுரந்து பல்வேறு வடிவங்களில் இயற்கையாக படிந்திருப்பதைக் காணலாம்.  இவை துணி சீலைத் தூரிகைகள் ( ribbons), முள்ளங்கிக்கிழங்குகள், சிறு வைக்கோல் கீறல்கள் போன்ற பல வடிவங்களில் காணப்படுகின்றன. மேலும் குகையின் கரையோரங்களிலும், உச்சியிலும் ஏறத்தாழ 325-400 மில்லியன் ஆண்டுகளிற்கு முன்னர் வாழ்ந்த தாவரங்கள்,  உயிரினங்களின் படிமங்களும் மிகத்தெளிவாக இன்றும் காணக் கூடியதாக உள்ளது.

இந்தக் குகையில் நிலப்பரப்புக்கு கீழே 200 அடி ஆழம் வரை உல்லாசப்பயணிகள் வழிகாட்டியுடன் சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர். இதைப் பார்வையிடச் செல்பவர்களுக்கு வியப்பூட்டும் வகையில் இயற்கையாக அமைந்திருக்கும்  60 அடி பாதாள நீர் வீழ்ச்சியையும் காணலாம்.

வரலாறு

NiagraCave3_520x371நயாக்கிரா குகையானது ஹார்மனி Harmoney Minnesota என்னும் ஊரில் விவசாய நிலங்களின் மத்தியில் காணப்படும் பூகோள அதிசயமாகும். இந்தக் குகை 1924ம் ஆண்டு வரை ஒருவரும் அறிந்திருக்கவில்லை.  உள்ளுர் விவசாயி ஒருவர் தமது கால்நடைத் கொட்டிலில் மூன்று பன்றிகள் தப்பி விட்டன என்று அக்கம்பக்கத்தில் தேட ஆரம்பித்தார்.  எங்குத் தேடியும் இந்த பன்றிகளைக் காணாததினால் ஊராரிடம் உதவி கேட்டார். இதைக் கேட்டு உதவி செய்ய வந்த இளைஞர்கள் பக்கத்தில் இருந்த நிலப்பரப்பெல்லாம் தேடி கடைசியாக இயற்கையில் உருவான தாவர செடிகளிடையே  மறைந்திருந்த ஆழமான புதைக்குழியைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள்  ஊருக்குள் சென்று கயிறு போன்ற உபகரணங்களைக் கொண்டு வந்து குகைக்குள் இறங்கினர். சுமார்  50 அடி ஆழத்தில், குகையின் ஒரு சாரலில் தொலைந்த பன்றிகளைக் கண்டுப் பிடித்தனர். பன்றிகள் உயிருடன் மீட்கப்பட்டன்.  இந்த சம்பவத்திலிருந்து இந்தப் புதைகுழி பற்றிய செய்தி ஊராருக்குத் தெரிய வந்தது  எனலாம். ஆயினும் உண்மை  குகை ஆராய்ச்சியானது ஐயோவா மாநிலத்தில் இருந்து வந்த ஆராய்ச்சியாளர்களால் தான் பிரபலப்படுத்தப்பட்டது.

NiagraCave_profileView_920x227

பூகோளவியல்

NiagraCave7_520x371நயாக்கிராக் குகையின் கதை ஏறத்தாழ 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது எனலாம். ஏறத்தாழ 325-400 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வட அமெரிக்கா ஆழம் குறைந்த எனினும் பரந்த கடலினால் சூழப்பட்டு இருந்தது.  இந்தக் கடலை பூகோளவியலாளர் ஓர்டோவிசியன் கடல் Ordovician Sea என்று அழைப்பர். இந்த நிலப்பரப்பு இப்போது இருக்கும் குகையிடத்தில் இருந்து இன்னும் தெற்கிலும் கிழக்கிலும் காணப்பட்டதாம். ஒரு காலத்தில் இந்த நிலப்பரப்பு கடல் தண்ணீருக்குள்ளே காணப்பட்டது. இதன் காரணமாக பல மணல், மற்றும் தாதுப்பொருள் சுரப்புக்கள் கடலின் அடியே பதியத் தொடங்கின. இதன் காரணமாக அவ்வப்போது இறந்த உயிரினங்களும் இந்த கடலடியில் தாழ்ந்து, அமிழ்ந்து காணப்படுகின்றன.

நயாக்கிராக் குகையானது பல்வேறு குடைவான நுழைவாயில்களைக் கொண்ட குகையாகும். இவை பல நூறு அடிகள் ஆழத்திலும் மைல் கணக்கில் அகன்று பரவியும் காணப்படுகிறது.

– யோகி அருமைநாயகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad