கலிங்கத்துப்பரணி
ஆயிரம் யானைகளைப் போரில் வென்ற வீரனைப் பாடும் நூல் பரணி எனப்படும். பரணி என்பது தமிழ் மொழியிலுள்ள 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. இது கலித் தாழிசையாற் பாடப்பெற்றது. பெரும்போர் புரிந்து வெற்றிபெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி யென்று கூறுவர்.
கலிங்கத்துப்பரணி என்ற இரண்டு நூல்கள் உள்ளன. அவை முறையே
செயங்கொண்டார் மற்றும் ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டது. செயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணியே தமிழின் முதல் பரணி நூல் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பலபட்டடைச் சொக்கநாதர் என்னும் புலவர் “பரணிக்கோர்ச் செயங்கொண்டான்” என்றும் ஒட்டக்கூத்தரால் “தெந்தமிழ்த்தெய்வப் பரணி” என்று செயங்கொண்டார் பாடிய பரணியைச் சிறப்பித்துள்ளார்
இப்பரணி நூல் முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் வடகலிங்க மன்னன் அனந்தவன்மனை படை எடுத்து வென்றதைப் பாடியது. ஒட்டக்கூத்தரின் கலிங்கத்துப்பரணி, முதலாம் குலோத்துங்கனின் மகன் விக்ரமச்சோழன் தென்கலிங்க மன்னன் கலிங்க வீமனை வென்றதைப் பாடியது. இந்த நூல் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் இந்த நூலைப்பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.
செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணிலிருந்து அரசர்களின் இயல்புகளும் அக்காலப் போர் முறையும் மற்றும் மக்கள் வாழ்கை முறையும் அறியப்படுகின்றது.
இந்நூல் பின் வருமாறு தலைப்புகளில் அமைக்கப்பட்டுள்ளது.
1. கடவுள் வாழ்த்து
2. கடைத் திறப்பு
3. காடு பாடியது
4. கோயில் பாடியது
5. தேவியைப் பாடியது
6. பேய்ப் பாடியது
7. இந்திர சாலம்
8. இராச பாரம்பரியம்
9. பேய் முறைப்பாடு
10. அவதாரம்
11. காளிக்குக் கூளி கூறியது
12. போர் பாடியது
13. களம் பாடியது
குலோத்துங்கன் புரிந்த வடநாட்டுப் போர், துங்கபத்திரைப் போர், அளத்திப் போர், மைசூர்ப் போர், பாண்டியர் ஐவரை வென்றது, விழிஞம், காந்தளூர்ச் சாலை ஆகிய போர்களில் வென்றது பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் கலிங்கத்துப் பரணியில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
குறிப்புதவிகள்
1. கலிங்கத்துப்பரணி
3. Wikipedia
4. www.tamilvu.org
– சத்யா