\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எமது இலத்திரனியல் உலகமும் அதன் பரிவிளைவும்

Filed in இலக்கியம், கட்டுரை by on November 3, 2013 0 Comments

Electronic_world_347x346இன்று நமது அன்றாட வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் நமது அவதானமானது பல்வேறு இலத்திரனியல் சாதனங்களினை நாடியே உள்ளது. நமது தற்போதய காலத்தை இலத்திரனியல், அறிவியல், தொடர்பியல் முன்னேற்ற நூற்றாண்டாக எடுத்துக்கொள்ளலாம். இதை இந்தத் தசாப்தத்தில் பிரதானமாகத் தரும் சாதனங்கள் இலத்திரனியல் கைத்தொலைபேசி, கைப்பலகை ஆகியன. இச்சாதனங்கள் சென்ற நூற்றாண்டில் வர்த்தகமானிகளால் வகுக்கப்பட்ட அபிவிரித்தியடைந்த, அபிவிரித்தியடைந்து கொண்டிருக்கும், மற்றும் இருண்ட கண்ட நாடுகள் சகலத்தையும் ஊடுருவித் தொடுக்கிறது. தகவல் பரிமாற்றம், தொலைத் தொடர்புத் தொழிநுட்ப மேம்படல், சாதாரண மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியுள்ளது, அரசியல், பொருளியல் சர்வாதிகாரத் தன்மைகளை உடைக்க, மனித உரிமைகளைப் பேண வழிவகுக்கிறது என்றெல்லாம் வர்ணிக்கப்படும். இதுவே இந்த நூற்றாண்டின் பெரும் வெற்றி என்போர் சிலர்.

பௌதீகவியலில் நியூட்டனின் இயக்கவிதிகளில் 3வது கூறுகிறது ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு. எனவே விஞ்ஞான ரீதியில் நாம் தொழில்நுட்பத்தை எடுத்துக் கொண்டால் சில அடிப்படை விடயங்கள் தெளிவிற்கு வரும். இலத்திரனியலோ இல்லை அடிப்படைக் கடிகாரக்கம்பிகள், துவிச்சக்கரம் போன்ற சாதனங்களையோ எடுத்துப்பார்த்தால், தொழிநுட்பமானது மனிதனிற்கும் இயற்கையோ, அல்லது செயற்கை உலகத்திற்கும் இடைப்பட்ட ஒன்றே.

முதல் தளத் தொழிநுட்பம்

நாம் மழையில் நனையாமல் இருக்க உபயோகிக்கும் குடையை எடுத்துக்கொண்டால் அதுவும் ஒரு தொழிநுட்பமே. குடையானது மனிதனின் தலைக்கும் இயற்கை மழைத்துளிகளற்கும் இடையில் உள்ளது. நாமுடுக்கும் ஆடைகளும் அது போன்றவையே. இவற்றை நாம் முதல்தடத் தொழிநுட்பச் சாதனங்கள் என்று கூறிக்கொள்ளலாம். மனிதராகிய நாமும், குரங்கினங்கள், சில பறவையினங்களும் இது போன்ற முதல்தடத் தொழிநுட்பச் சாதனங்களை உபயோகிக்கும் ஆற்றல் உள்ளவர்களாக உள்ளோம். முதல்தளத்து உபகரணங்கள் பிரதானமாக வாழும் சூழலில் காணப்படும் மூலப்பொருட்களினால் பிரதானமாக ஆக்கப்பட்டவை. இந்த தொழிநுட்ப உபகரணங்கள் எம்மைப் பெரும்பாலும் இயற்கை உலகத்திலிருந்து அகற்றுவதில்லை. எனவே நாம் எமது சூழலைத் தொடர்ந்து உணர்ந்து கொள்ளக்கூடியவராக உள்ளோம்.

விலங்கு,பறவை <—–> தொழில்நுட்பம் <——–> இயற்கையுலகம்

மனிதன் <————–> தொழில்நுட்பம் <————-> இயற்கையுலகம்

முதல் தளத்தொழிநுட்பங்கள் அடிப்படை இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டமைந்தால் இது மனித விலங்கினத்திற்கோ, இயற்கைச் சுற்றாடலிற்கோ பாரதூர விளைவை உருவாக்கவில்லை. உலகளாவிய பண்டைய கிராமிய தமிழருட்பட, ஆதிவாசிச் சமூகங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்கள்.

இரண்டாம் தளத் தொழிநுட்பம்

நாம் எமது மனிதத்துவத்தின் அடுத்த கட்டமாக உள்ள தொழில்நுட்ப உயர்ச்சிகளை எடுத்துக்கொண்டால் அதை நாம் இரண்டாம் தளத் அல்லது அடுத்த தள உபகரணங்கள் எனலாம். இவை பிரதானமாக ஒன்று தொடக்கம் பல கருமங்களை செய்ய உதவும் கருவிகளாக அமைகின்றன. அது எம்மை மற்றய இவ்வுலக இயற்கை உயிரினங்களில் இருந்து பிரிக்கும்.

இரண்டாம் தள தொழிநுட்பங்கள் சென்ற நூற்றாண்டு பிரதான உதாரணம் புகையிரதம், மற்றும் நிலக்கரி, எரிவாயு உபயோகிக்கும் கருவிகள். இரண்டாம் தள தொழிநுட்பங்கள் இயற்கை மூலங்களை உபயோகித்து செயற்கைக் கருமங்களைச் செய்வதில் மனிதனுக்கும் முதலாவது தொழிநுட்பத்திற்கும் இடையில் உள்ள நிலைப்பாடு. இரண்டாம் தள தொழிநுட்பம் மனிதனால் தனது அன்றாட கருமங்களை இலகுவாக்க ஆரம்பிக்கப்படினும் இரண்டு தளத் தொழிநுட்பங்களை அமைப்பதில் பல இயற்கை அமைப்புக்கள், சுற்றாடல் சூழ்நிலைகள், பருவமாற்றங்கள் பற்றிய அறிவியல்கள் முன் தெரியாமலும், தெரிந்தும் புறக்கணிக்கப்பட்டும் சுயநலமாக கருமங்களை முடித்து வைப்பதில் அவதானம் செலுத்தப்பட்டது. இதன் பரிவிளைவுகளை நாமும் நமது சூழலும் இன்று அனுபவிக்கிறோம்.

மனிதன் <————–> தொழில்நுட்பம் <————-> தொழில்நுட்பம்

இரண்டாம் தட தொழிநுட்பத்தின் உச்சக்கட்டத்தில் இலத்திரனியல், கணனி பரிமாற்றங்களையும் எடுத்துக்கொள்ளலாம். மனிதனின் உலகத் தொடர்பை இரண்டு தடழங்களில் தொழில்நுட்பம் இடைநடுவில் உள்ளது. இதன் பயன் பல நல்ல வகையாக இருப்பினும், இயற்கையின் அழிவுகளுக்கும், சூழல் மாசுறதலுக்கும் காரணமாகவும் உள்ளது. எரிவாயு அதிக உபயோகம், சூழலுக்கு மாறான நகர, மாநகர அமைப்புக்கள், சனத்தொகை அதிகரிப்பு, பொருளாதார நோக்கு உணவு உற்பத்தி முறைகள் போன்றவை இரண்டாம் தட தொழிநுட்பத்தின் மறுபக்கம்.

முன்றாவது தள தொழில்நுட்பம்

உச்ச வேகமான இலத்திரனியல் தகவல் பரிமாற்று முறைகள், கணனிகள் பரிமாற்றுத்தகவல்களைத் தாமாகவே கிரகிக்கக் கூடிய ஆற்றல், இந்த நூற்றாண்டில் மனிதன் தொழில் நுட்பத்தொடரில் தேவைப்படாத, என்னும் நுகரும் ஒரு உயிரினமாக மாறிவருவதையும் காணக்கூடியதாகவே உள்ளது. நமது வாழ்க்கையை எடுத்துப்பார்த்தால் பிறப்பிலிருந்து, எமது கல்வி computer aided instructional designs, தொழில்வாய்ப்பு job screening, monitoring, reviewing, எமது உல்லாச நாழிகை செலவழிப்பு entertainment, மருத்துவம் robotic surgery, robotic care, distance car, உணவு food manufacturing, சமூகத் தொடர்பு Social Network, போர், பாதுகாப்பு robots and drobes போன்ற யாவையும் பிரதானமாக மூன்றாம் தட தொழிநுட்ப இடைநடுவிலேயே உள்ளது

தொழில்நுட்பம் <————–> தொழில்நுட்பம் <————-> தொழில்நுட்பம்

மேலும் தென்றல் காற்று வீசும், தென்னஞ்சோலை, ஆலமரத்துப் பிள்ளையார் போய், இவையாவும் சினிமா மற்றும் விளம்பர இலத்திரனியல் படமாகவும் மாறிவருகிறது.

இரண்டாவது தள தொழிநுட்பங்களின் பரிவிளைவு முற்று முழுதாக உணர முடிந்துள்ள மானுடம், தற்போது முன்றாவது தட தொழிநுட்பம் கூகிள் எர்த்தாகவும், ஃபேஸ்புக்காகவும், அமேசானாகவும் எமது புது உலகத்தை நிர்ணயிக்கிறது. மனிதவியல் வாழ்க்கைத்தர உயற்றம் நல்ல விடயமாகப்படினும், நாம் எவ்வளவில் இயற்கை உலகில் இருந்தும், மனிதாபிமானத்திலும் இருந்து விடுப்பட்டு வருகிறோம் என்றும் நிதானிப்பதும் எமது இனம் தொடர் அவசியம்.

இது எமக்கும் எமது இளயதலைமுறைகளுக்கும் நல்லதுதானா என்று பார்த்துக்கொள்ளுவதும் இந்நூற்றாண்டுத் தலைமுறையினர் ஆகிய எமது கடமை.

– யோகி அருமைநாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad