\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தீபாவளி வாழ்த்து

Filed in இலக்கியம், கவிதை by on November 4, 2013 0 Comments

Diwali_poem420x279சலசலவென நீரில் குளித்து

பளபளவென புத்தாடையில் சொலித்து

கமகமவென உணவைச் சமைத்து

பலப்பல நண்பர்களை அழைத்து

படபடவெனப் பட்டாசுச் சத்தம்

கிழிகிழியென காதைக் கிழிக்கும்

கிடுகிடுவென குழந்தைகள் ஓட்டம்

கலகலவென சிரிப்பொலி இனிக்கும்

விறுவிறுவென மத்தாப்பு மினுக்கும்

வளவளவென வாழ்த்தொலி கேட்கும்

சடசடவென மழையும் கொட்டும்

கணகணவென கோயில் மணியடிக்கும்

சுடச்சுட உணவைச் சுவைப்போம்

வாரிவாரி வறுமைநீக்க வழங்குவோம்

புதுப்புது திரைப்படம் காண்போம்

வருடாவருடம் தீபாவளி கொண்டாடுவோம்!

வாழிய வாழிய தீபாவளி திருநாள்!

-பாண்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad