\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கனவு மெய்ப்பட வேண்டும்

Filed in இலக்கியம், கவிதை by on February 21, 2013 2 Comments


kanavumeipadavendum
உழுவோர் ஊணுண்டு செருக்குற
நிலமிது வளம்பெற வேண்டும்!
உழைப்போர் உரிமையுடன் ஓய்வுற
நிலவது வசப்பட வேண்டும்!

தவிப்போர் தாகம் தீர்த்திட
தடையறு தண்ணீர் வேண்டும்!
அணைப்போர் அணைந்தே ஒழிந்திட
அடைமழை பொழிந்திட வேண்டும்!

இருப்போர் இயன்றதை வழங்கிட
இல்லாமை ஒழிந்திட வேண்டும்!
கற்போர் கற்றதை முழங்கிட
கல்லாமை நசிந்திட வேண்டும்!

மதிபோல் மாநிலம் புகழுற
மதியோர் மாண்புற வேண்டும்!
நதிபோல் மகிழ்ச்சி பொங்கிட
நலிந்தோர் நலம்பெற வேண்டும்!
கலைக்கோர் உயரிடம் அமைத்திட
களஞ்சியமாய் உறைவிடம் வேண்டும்!
தலைக்கோர் தருக்கும் அமைந்திட
துணையாய்த் தமிழும் வேண்டும்!

நிலப்போர் நிகழா திருந்திட
நிரந்தர தீர்வும் வேண்டும்!
கடற்போர் மூலையில் முடங்கிட
கண்டங்கள் முனைந்திட வேண்டும்!

பனிப்போர் பனியாய் விலகிட
பகையுறா நாடுகள் வேண்டும்!
செகப்போர் எனுஞ்சொல் வீழ்ந்திட
செகத்தோர் செழிப்புற வேண்டும்!

மணப்போர் மலராய் மலர்ந்திட
மனங்கள் இணைந்திட வேண்டும்!
மனிதகுலத்தோர் ஒன்றாய் மகிழ்ந்திட
மதங்கள் மடிந்திட வேண்டும்!

பொதுப்போர் புகையா திருந்திட
பேதங்கள் ஒழிந்திட வேண்டும்
புதுப்போர் புனையா திருந்திட
பேரன்பு நிலைத்திட வேண்டும்

சுவைப்போர் நாளும் சுகித்திட
சொற்போர் புலமை வேண்டும்!
எதிர்ப்போர் எவரும் இன்றியே
எம்தமிழும் வளர்ந்திட வேண்டும்!

– ரவிக்குமார்

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. சச்சிதானந்தன் வெ says:

    எது வேண்டும் என பட்டியளிட்டு – உடனுக்குடன் அது எப்படி சாத்தியம் என்றும் சொல்லி இருப்பது – சிரப்பான முயற்சி. ஆசிரியரின் சமூக நோக்கும் – சொல் ஆளுமையும் பாராட்டுதலுக்கு உரியது.

  2. rani raj says:

    Ethirpor ennikayum thavirpor ennikayum -thamizhai
    ethirpor ennikayum thavirpor ennikayum

    kanamal poyyaha vendum -ith thamzhan
    kanavuhal meyyaha vendum…… vaazhthukkal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad