சமுதாயத்தில் பெண்களின் நிலை
ஒரு நாட்டினுடைய வளர்ச்சியை, அந்த நாட்டினுடைய பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் கல்வி அறிவு இவைகளே நிர்ணயிக்கின்றன.
இவற்றில் பெரும்பங்கு பெண்களையே சாரும். ஏனெனில் பெண்களின் கல்வியறிவு அவர்தம் குடும்பத்தின் வளர்ச்சி மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
பெண்களுக்கு என்று பாதுகாப்பின்மை, மற்றும் கல்வியறிவு இல்லாத நிலை மட்டுமே அவர்களின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் காரணிகள். இந்தியாவில் மட்டும் பெண்களின் கல்வியறிவு என்பது கைக்கு எட்டாத கனியாகவே இருக்கிறது. ஏனென்றால் நம் இந்திய தேசம் பெரும்பாலும் கிராமப்புறங்களால் உருவானது. அதனால்தான் கிராமங்கள்தான் இந்தியாவின் விடியல் என்று காந்தியடிகள் கூறினார்.
ஆனால் இன்னமும் தமிழகத்தில் உள்ள ஒரு சில கிராமங்களில் பெண்கள் அடிமைகளாகவும் அவர்கள் கல்வியறிவு பெறாதவர்களாகவும், பிறந்த பெண் குழந்தைகளை அழித்து விடுபவர்களாகவும் இருக்கின்றனர். அதற்கு காரணம் அவர்களின் அறியாமையும் கல்வியறிவு இல்லாததும்தான். அதனால் கிராமப்புற கல்வியறிவு என்பது இக்காலகட்டத்தில் மிகவும் அத்தியவசியமான ஒன்று.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பணிபுரியாத துறைகளே இல்லை! ஏன் நம் தமிழகத்தை ஆட்சி செய்வதும் ஒரு பெண்ணே! அடிமைப்படுத்திய ஆண்களே அசந்து வியக்கும் வண்ணம் பல பெண்கள் தங்கள் ஆற்றலால் உயர்ந்த நிலையை அடைந்திருக்கின்றனர்.
இக்கால கட்டத்தில் துணிந்து நின்று சமுதாயத்தை எதிர்கொள்ளும் பெண்கள்தான் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். அதற்கு அவர்களுக்கு தேவையான கல்வியறிவும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிராமத்து பெண்களும் தங்கள் நிலையை நாட்டுவர் என்பதும் உறுதி;
இழந்தது எத்தனை எத்தனையோ!
இன்று இருப்பது நம்பிக்கையும், தைரியமும்தான்!
இனி இழக்கவென்று ஏதுமில்லை!
நம்பிக்கை வைத்து நடந்தால்!
நம்மால் நடப்பது எத்தனை எத்தனையோ…..
அதில் உண்மையும் அன்பும்
நிறைந்திருக்குமானால், இனி வெற்றியைத்தவிர
வேறொன்றுமில்லை! பயணிக்கப் பயணிக்க
நித்தம் ஒருகதை சொல்லும் நியதி வாழ்க்கை!
எழுத்தாக்கம்
வள்ளுவர் கல்லூரி மாணவிகள்
தேவி பாவஸ்ரி – ஆங்கிலம் இளங்கலை மூன்றாமாண்டு
கோமதி – கணிதம் இளங்கலை மூன்றாமாண்டு
விஜயலக்ஷ்மி – கணிதம் இளங்கலை இரண்டாமாண்டு
இந்தக் கட்டுரை எழுதாளர்களுக்கு ஒரு இனிய விண்ணப்பம். பனிப்பூக்கள் சஞ்சிகையுடன் vanakkam@panippookkal.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் |
Tags: கிராமங்களில் பெண்கள், சமுதாயத்தில் பெண்களின் நிலை, பெண்களின் நிலை