மா விளக்கு
மாவிளக்கானது தமிழ்க்கிராமப்புற பாரம்பரியம் கார்த்திகை முருகனிற்கும், ஊர் அம்மனிற்கும், புரட்டாதியில் எள்ளெண்ணெய் எரித்தலின் போதும் செய்யப்படும்.
தேவையானவை
- பச்சை அல்லது தீட்டாத புதிய அரிசி
- பனங்கட்டி
- நல்லெண்ணெய்
செய்யும் முறை – அரிசியை ஊறவைத்துப் பின்னர் சற்று உலர்த்தி அரைக்கவும், அரைத்த அரிசியுடன் பனங்கட்டித் துருவல்கள் சேர்த்துப் பசையாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் உள்ளங்கை வெப்பத்தில் கோழைகளாக உருட்டி, நடுவில் பெருவிரலால் அழுத்தி எண்ணெய் விடக்கூடிய அளவு ஒரு பள்ளத்தை உண்டாக்கவும்.
பள்ளத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் திரிவைத்து எரித்துப் படைத்துவிட்டு, பின்னர் உட்கொள்ளலாம்.
மா விளக்குப் பால், பழம் சேர்த்து உட்கொள்ளுதல் மரபு.