உலகச் செம்மொழி – அத்தியாயம் 8
அத்தியாயம் 7 செல்ல இங்கே சொடுக்கவும்
சப்பானியத்தில் புலமைப் பெற்ற நண்பர் யோகியை போன வாரம் தமிழ்ப் பள்ளியில சந்தித்த போது, சப்பானிய மற்றும் தமிழ் மொழித் தொடர்பு ஆய்வுகள் இன்று பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுமார் 1000க்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் சப்பானியத்தில் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னாங்க. நான் போன அத்தியாயத்துல நானூறு தமிழ்ச் சொற்கள் சப்பானியத்துல இருப்பதாகச் சொன்னது பழைய தரவுகள் என்றும் சொன்னாங்க.
சப்பானுக்கு மிக அருகில் உள்ள ஒரு பெரிய தீபகற்பம் கொரிய தீபகற்பம். இது இப்பொழுது வட கொரியா மற்றும் தென் கொரியா என்ற இரு நாடுகளாக பிரிந்து உள்ளது. இங்கு பேசும் மொழி கொரிய மொழி. இதன் எழுத்துக்கள் “ஹான்குவல்” என்று அழைக்கப்படுகின்றது. இந்த எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர் 14ம் நூற்றாண்டில் கொரியாவை ஆட்சி செய்த செயோங் (சேயோன் என்பது திருமாலின் ஒரு பெயர்) என்ற மன்னர்.
புலம் பெயர்ந்த நாடுகளில், நீங்கள் சாலையோரம் நிற்கையில் யாரேனும் அலைபேசியில் “அச்சச்சோ”, “அம்மா”, “அப்பா”, “நீ”, “இங்கே” போன்ற சொற்களைப் பயன்படுத்துவாராயின் அவர் தமிழராய் தான் இருக்க வேண்டுமென்பதும், தமிழில் பேசியிருக்க வேண்டுமென்பதும் அவசியமில்லை. அவர் கொரிய மொழியிலும் இந்த சொற்களைப் பேசி இருக்கலாம்.
தமிழ் மொழிக்கும் கொரிய மொழிக்கும் இடையேயான தொடர்பை டொரான்டோ நகரில் வசிக்கும் ஜூங்நாம் கிம் ஆராய்ந்து வருகின்றார். இவர் ஒருநாள் டொரான்டோ நகரில் தொடர் வண்டியில் சென்றுக்கொண்டிருந்த பொழுது யாரோ சிலர் கொரிய மொழியில் பெசிக்கொண்டிருப்பதாக உனர்ந்து அவர்களைத் தேட, அங்கு அவ்வாறு எவரும் இல்லாததால் , வேறு இன மக்களின் பேச்சில் கொரியச் சொற்கள் கலந்திருப்பதாக நினைத்தார். அங்கு பேசிக்கொண்டிருந்த குடும்பத்தினரை அணுகிய போது, அவர்கள் பேசிக்கொண்டிருப்பது தமிழ் மொழி என்று தெரிந்து அவர் தமிழ் மற்றும் கொரிய மொழியாராய்ச்சினை துவங்கியுள்ளார்.
கொரியாவில் வசிக்கும் மற்றொறு தமிழ் ஆய்வாளர், கொரிய மொழி எழுத்துருவிற்கும் தமிழ் எழுத்துருவிற்கும் உள்ள தொடர்பை உலகச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரையாக சமர்ப்பித்தார். அவர் தனது ஆய்வின் முடிவுகளாக கொரிய மொழியின் எழுத்துரு தமிழின் எழுத்துருவே என அறிவித்துள்ளார்.
இப்படி தமிழுக்கும் கொரியத்திற்கும் உள்ள தொடர்பு இன்று நேற்று வந்த தொடர்பு இல்லங்க. சுமார் கிபி 1ம் நூற்றாண்டு முதலே கொரியாவிற்கும் தமிழகத்திற்கும் தொடர்பு இருந்ததாக கொரியாவின் வரலாற்று நூலான ‘சாம்குக் யுசா’ (SAMGUK YUSA) தெரிவிக்கின்றது. பாண்டிய நாட்டு பேரழகிக்கும் கொரிய இளவரசனுக்கும் இருந்த அந்த தெய்வீக காதலை அடுத்த அத்தியாயத்துல பாக்கலாங்க.
-சத்யா-