\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கனவுக் கன்னி

Filed in இலக்கியம், கவிதை by on January 15, 2014 2 Comments

kanavuk-kanni_620x945

கண் மூடி நான் நினைத்தால்

கனவு போல் நிழல் உருவம்

கலை நயம் மிகுந்த பிரம்மன்

கருவி கொண்டு செதுக்கிய சிற்பம்

 

டி தொடங்கி முடி வரை

ற்புதம் சொலிக்கும் அழகுப் பதுமை

ன்பு ததும்பும் அவளின் பெருமை

னைத்தும் நினைத்திட மலர்ந்த கவிதை

 

றடி நீண்ட அடர்த்திக் கூந்தல்

றாத் தாகத்தை ஆற்றிடும் மேகம்

சை துறந்த முனிவனும் கவிழும்

ழ்ந்த பக்தி அறிவிக்கும் அகலநுதல்

 

தயம் நோக்கிக் கணையதைத் தொடுக்கும்

ந்திர தனுசாய் வளைந்த புருவம்

ன்பத் தடாகத்தில் நீந்திடும் கயல்களாய்

ருபுறம் முகத்தில் ஒளிரும் கண்கள்

 

ர்த்து அழைத்து இறுக அணைத்து

ரம் சேர்க்க ஏங்கவைக்கும் அதரங்கள்

ன்றவள் அன்பில் இதமாய்த் தந்த

ரம் காய்ந்திடாக் குளுகுளுக் கன்னங்கள்

 

லகம் முழுதும் ஓயாது தேடிப்பெற்ற

யர்வைரம் உண்மையில் பொருந்தும் நாசி

ரோமங்கள் சிலவும் அரூபமாய்த் தோன்றி

ன்னதம் ஆக்கிய உயர்வான உதடுகள்

 

றிய தேனது உள்ளிருந்து வழிந்து

ர்நனையாது காத்திடும் முத்துப் பற்கள்

ஞ்சல் மேல் ஒய்யாரமாய் நின்று

சலாய் ஆடிடும் ஒப்பிலா நன்நாக்கு

 

ண்ணிலாக் கடல்தேடி மூச்சடக்கி முத்தெடுக்க

ங்குமிலா வலம்புரி மிஞ்சும் கழுத்து

ண்பதடி உயரமாய் எல்லோரும் பயனுறும்

ழில்மிகு மூங்கில் போன்றவிரு தோள்கள்

 

ங்கித் தவிக்கும் இளைஞன் அவனிடம்

ற்றமுற நின்று எழில்கூட்டும் முன்னழகு

க்கம் அதிகமுற இறங்கியதவன் பார்வை

கமாய்த் தளர்ந்து நிலைப்பதவள் உதரத்தில்

 

யோ தவறென விலக, தோன்றிய

யம் இல்லையோ உண்டோவென்ற இடை

ந்தில் தொடங்கிய ஆண்மையின் ஆர்வம்

ம்பதிலும் தொடர வித்திட்ட பெண்மையழகு

 

ய்யாரமாய் வளர்ந்த வாழைத் தண்டொத்த

ப்பிலாத கவர்ச்சிக் குறுத்தான தொடைகள்

ப்புமை கூற விழைந்தால் அவையிரண்டில்

ன்றுக்கு மற்றொன்றே எனும் பின்னழகு

 

வியமாய் என்னுள்ளே ஒளிவீசி வீற்றிருக்கும்

ங்காரப் பொருளாய் என்னுள் அமைந்தவள்

ரணங்கு அவளே என்னும் ஒருசொல்

ராயிரம் முறைசொல்வேன் ஒருபோதும் மாற்றிடேன்

 

கண் மூடி நான் நினைத்தால்

கனவு போல் நிழல் உருவம்

கலை நயம் மிகுந்த பிரம்மன்

கருவி கொண்டு செதுக்கிய சிற்பம் !!!

–    வெ. மதுசூதனன்.

 

Tags:

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Raghavan says:

    Awesome…Wonderful thought and compilation…Un Kavidhai aatralukku naan adimai.

    • வெ. மதுசூதனன் says:

      நன்றி ராகவன். சந்தங்களை சாவதானமாகக் கவியில் கொண்டு வரும் உங்களின் பாராட்டு என்னைப் பூரிப்படைய வைக்கிறது. நன்றி பல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad