\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பாமரனின் புரிதல்கள்

pamaran_420x420
“அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்”

கூறும் சூழ்நிலை: தைரியமாக சாதிக்க வேண்டிச் சொல்வது!

பொருள் : துணிந்து செய்யும் செயல் நிச்சயம் வெற்றி பெறும். அம்பலம் என்பது பொதுமக்கள் நிறைந்திருக்கும் சபை. அது போன்ற சபைகளில் அச்சமின்றி பேசுபவர்கள் புகழ் பெறுவார்கள்.

“அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது”

கூறும் சூழ்நிலை: சரியான முனைப்பின்றி காரியம் செய்வோருக்கு சொல்வது.

பொருள் : சரியான முனைப்பும், தலைமையும் இருந்தால் மட்டுமே செய்யும் செயல் வெற்றி பெறும். இல்லாவிட்டால் அச்சாணி இல்லாத தேர் எவ்வாறு ஓடாமல் முறிந்து விடுமோ அது போல செயலும் முழுமையடையாது.

“அடக்கமுடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்”

கூறும் சூழ்நிலை: அடக்கமின்றி நடந்துக் கொள்பவர்களைப் பார்த்துச் சொல்வது.

பொருள் : முற்றும் உணர்ந்த அறிஞர்கள், அடக்கத்துடன் நடந்துக் கொள்வார்கள். மேலோட்டமாக தெரிந்துக் கொண்டவர்கள் அடக்கமின்றி நடந்துக் கொள்வார்கள். இக்கருத்தையே கூறும் மற்றொரு பழமொழி – ‘நிறைக்குடம் தளும்பாது – குறைகுடம் தளும்பும்’

“அடங்காத பாம்பிற்கு ராஜா மூங்கில் தடி”

கூறும் சூழ்நிலை: சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் நடந்துக் கொள்வது.

பொருள் : சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்பட்டால் எளிதில் வெற்றி கிடைக்கும். ‘ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கணும் . பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்கணும்’ என்ற பழமொழியும் இக்கருத்தையே விளக்குகிறது.

“அடிக்கிற காற்றுக்கும் பெய்கிற மழைக்கும் பயப்பட வேண்டும்”

கூறும் சூழ்நிலை: சக்திக்கு மீறிய செயல்கள் உள்ளன என நினைவுப்படுத்துவது.

பொருள் : இயற்கையை வெல்வது கடினம் எனக் குறிப்பிட்டாலும், எதிராளியின் பலமறிந்து போரிட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது இவ்வரிகள். ஒரு காரியத்தில் நிச்சயமாக வெல்ல முடியாது எனத் தோன்றினால், அதைச் செய்ய முயல்வதை விட அகன்று விடுவதே நல்லது.

–    கார்த்தி

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Anonymous says:

    nice

  2. prabu says:

    heard it on facebook..

    முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை ஒரு போதும் வெல்லாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad