\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அரசியலில் இதெல்லாம் சகசமப்பா…

Filed in இலக்கியம், கவிதை by on January 15, 2014 0 Comments

arasiyal_520x367

முடிந்தால் கட்டு

கட்டினால் இடி

முடிந்தவரை மௌனமாயிரு

உரத்துக் குரல்கொடு

ஆளுறக்கம் போல் நடி

வீழும்வரை பொறுமை கொள்

வீழ்ந்தபின் உரக்கக் கத்து

அன்பாய்ப் பேசு

வாய்ச்சொல்லை நஞ்சாய்க் கக்கு

அன்பாய் வருடு

முதுகில் குத்து

நல்லவன்போல் இரு

வேடம் போடு

பழிவாங்கப் பழகு

பாவம் பண்ணத் துணி

காவலனாய் நடி

பழிக்கு அஞ்சாதே

நண்பனைப் பகை

பகைவனைத் துணைசேர்

காலப்போக்கில் நீயும்

நாட்டை ஆள்வாய்

-தியா-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad