கேளாய் மகளே
மானாட மயிலாடச் சொல்வேனடி
மனம்போல விளையாடச் சொல்வேனடி
தேனாகத் தமிழாகச் சொல்வேனடி
தானாகத் துயிலாடச் சொல்வேனடி
துணிவோடு மணம்பேசச் சொல்வேனடி
கனிவோடு கரம் நீட்டச் சொல்வேனடி
அமுதாக உரைபேசச் சொல்வேனடி
விழுதாக விழிதாங்கச் சொல்வேனடி
குறையின்றிப் புகழ்வாழச் சொல்வேனடி
கறையின்றிக் குணம்நாடச் சொல்வேனடி
பகையின்றித் துணைவாழச் சொல்வேனடி
பிறை யின்றிப் புவியாளச் சொல்வேனடி
பல நாடு புகுந்தாலும் சொல்வேனடி
தாய் மண்ணைத் துதிபாடு, சொல்வேனடி
பல மொழிகள் பயின்றாலும் சொல்வேனடி
தமிழ் மொழியைக் கொண்டாடு, சொல்வேனடி
– ராகவன்
Superb… Enjoyed it!
Good one Raghavan!! Very nicely written. Way to go!!!