விடியல்
நாள்தோறும் விடிகிறது பொழுது!
இரவு அழுக்கைப் பெருக்கிக் கொட்டிவிட்டு,
வெளிச்சம் அரங்கேறுகிறது!
ஒளியைத் தழுவிக்கொள்ள
பூமியெல்லாம் புத்துணர்ச்சி!!
மனிதர்கள் துயிலெழுகிறார்கள்,
ஆதிக்கக் கால்களின்
மிதிப்பைத் தாங்கிப் பழகிய
மனிதப் பாறைகள்,
உயிரற்றுக் கிடக்கின்றன!
ஒளி பாறைகளுக்குள்
நுழைவதில்லை!
பாறைகள் ஒளியைப்
பார்ப்பதில்லை!!!
மீண்டும் கவ்வுகிறது இருள்!!!!!
இருளின் பயணத்தில்
நாளைய நம்பிக்கை விடியல்!
பாறைகளைப் புரட்டிப் போட!!!
– க.வளர்மதி
II- CS- B
வள்ளுவர் கல்லூரி, கரூர்.
nice kavithai valarmathi