\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வாங்க ஃப்ரீயா பேசலாம்

Filed in இலக்கியம், கட்டுரை by on January 15, 2014 0 Comments

free-ya_pesalam_620x859”டேய் .. சுரேசு! எப்ட்றா இருக்கே? பாத்து எம்புட்டு நாளாகுது.”

“ஏ .. மாப்ளே .. என்கிட்டயே பிட்ட போட்றியா? நேத்து காலம தானே உன்னய பாத்தேன்?”

“என்னது? நேத்து காலம பாத்தியா? ஆமடா.. ஆமடா.. உங்க வீட்டு முன்னால பாத்தேனில்ல? முந்தாநா நம்ம சீனிவாசனில்ல .. அதாம்டா நெட்டுக்குத்தலா ஆறடிக்கு வளந்து நிப்பானே .. அதே சீனிவாசந்தேன்.. அவுங்க வீட்டுல பட்டறைய போட்டோம்..”

“அங்கன பட்டறைய போட்டுட்டு மட்ட மல்லாக்க படுத்து கெடந்துபுட்டு என்னிய பாத்தத மறந்துட்டியாக்கும்.. போதும்டா உங்க சங்காத்தம்..”

“ஏண்டா.. இப்புடி பொசுக்குனு கோவிக்கிற ..நானும் நீயும் அப்புடியாடா பளகியிருக்கோம்? எதோ அந்த எடுபட்ட பய கூப்டானே …அவன் மனசு நோவக்கூடாதே.. அதுக்காண்டி போயிருந்தேன்.. அங்கிட்டு போனாத் தான் தெரியுது .. பயபுள்ள பூரா சரக்கயுமில்ல குமிச்சு வெச்சிருக்கான் .. மேலாப்புல.. தோ.. இம்புட்டுக்கூண்டுத் தான் சாப்டேன்.. பொரட்டி எடுத்துறுச்சில்ல.. பைய்ய ஒசக்க போயி குப்புறப் படுத்தவந்தேன்.. விடிகாலம்பற எந்திரிச்சு வீட்டுக்கு ஓடியாறப்ப உன்னிய பாத்தேம் போலிருக்கு …”

“என்ட்டய ரூட்ட குடுக்கிறியே மாப்பு.. நீ இம்புட்டுக்கூண்டு சாப்புட்டியாக்கும்.. என்ன லந்தா?”

“ஏப்பு? ஏன்? வீட்லதான் பொண்டாட்டி கரச்சல குடுக்குறா.. நீயாவது என்னிய நம்புடா ..ரைட்டு விடு.. ஸ்டேஸனுக்கு போயிட்டு வர்றாப்ல தெரிது.. எதுனா சம்பவமா?”

“அதை ஏன் கேக்கற மாப்ளே.. நேத்து சாயந்திரம் மாலுக்கு போயிருந்தேன்… திரும்பி வந்து காரப் பாத்தாக்க அதுல ஒரு சிட்டய சொருகிட்டு போயிருக்கானுக .. என்னடான்னு எடுத்துப் பாத்தா .. வண்டீல கண் திஸ்டிக்காண்டி ரியர் வியூ மிரர்ல மாட்டி வெச்சிருந்த பிள்ளயார்பட்டி பிள்ளயாரை கழட்ட சொல்லி போட்டிருந்திச்சி..”

“அடி ஆத்தி.. புதுக் கூத்தாவுல்ல இருக்கு.. அப்புறம்..”

“அப்புறமென்ன நூத்தியிருபது டாலர் ஃபைன் கட்ட சொன்னாய்ங்க..”

“அட கொங்கா பயலுவளா. ஆட்ட கடிச்சி … மாட்ட கடிச்சி .. கடசீல உன்னையும் கடிச்சிட்டாய்ங்களா?”

“ஏய்.. நிப்பாட்டு. இப்ப நீ என்ன சொல்ல வர்ற? என்னய ஆடு மாடுங்களுக்கும் கேவலமானவன்னு சொல்ல வர்றியா?”

“இல்ல மாப்ள..கொஞ்ச நாளைக்கு முன்னாடி இப்படித்தேன் நம்ப தேவ்யானிட்ட ரவுசு பண்ணாய்ங்க .. சரி எதோ தெரியாத்தனமா அலப்பறைய போட்டாய்ங்கன்னு விட்டா அடங்காம திர்ராய்ங்க ..”

”நிறுத்தப்பு .. மொட்டத்தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சப் போட்டு நீ வேற பஞ்சாயத்த கூட்டாத.. நாஞ் சொல்றத சூதானமா கேளு..”

“வெளையாடத மாப்ளே.. இப்படியே விட்டுகிட்டே போனாக்க விடாம கொடுமை பண்ணுவாய்ங்க.. ஒரு தடவ அசிங்கப்பட்டாத்தான் அடங்குவாப்பல..”

”டேய் வெண்ணெ .. அடங்கறியா? இத மாதிரி பொம்மைங்கள மாட்றது வண்டிய ஓட்றவங்களுக்கு சாலைய மறைக்குதாம்..அதனாலத்தான் கழட்ட சொல்றாய்ங்க..”

“அதெப்புடி மாப்ளே.. தக்கனூண்டு பொம்மை பார்வைய மறைக்குதுன்னா, எங்கயாவது பார்க்கிங் பாஸ் வாங்கினா ஒட்டறானுங்களே ஸ்டிக்கரு.. அது பார்வைய மறைக்குது .. ஹாண்டிகாப்பு சிட்ட குடுத்து மாட்டச் சொல்றாய்ங்களே அது மறைக்குது .. சாயந்திர நேரத்தில காரை ஓட்டிட்டு வரும் போது சூரிய வெளிச்சம் பட்டு சுத்தமா பார்வைய மறைக்குது.. அதுக்காண்டி சூரியனை பிச்சுப் போட்டுற சொல்வாய்ங்களா?”

“ஏண்டா இப்படி சவுண்ட குடுத்து அலப்பற விடற? இதெல்லாம் இங்க ரூல்ஸாமுடா..”

”நீ சும்மாரு மாப்ள… இது ரூல்ஸுன்னா இவய்ங்களே ரியர் வியூ மிரர்ல மாட்ற செண்ட் அட்டைய ஏன் விக்கிறாய்ங்க .. அதெல்லாஞ் செட்டப்பா? எத்தன பேரு இந்த செண்ட் அட்டைய தொங்க விட்டிருக்காய்ங்க .. அவிங்க எல்லாரையும் விட்டுபுட்டு தக்கனூண்டு பொம்மைய மாட்டினதுக்கு உன்னய தூக்கி உள்ளாற வெச்சிட்டாய்ங்களே… இதேங்காட்டி நம்மூர்ல நடந்திருந்தாக்க .. அவனுக சோலிய முடிச்சிருப்பேன்…”

“ஏய் ராவுறத நிறுத்தறியா .. குண்டக்க மண்டக்க பேசி ஏள்ரய கூட்டாத..”

“என்ன பங்காளி இப்புடி சொல்லிபுட்ட.. எதோ எளந்தாரி பையனாச்சேன்னு உனாக்காவேண்டி பரிஞ்சு பேசுனா இப்பிடி எடுத்தெறிஞ்சு பேசுறே.. குமுறிக்கிட்டில்ல அளுகை வருது?.. டே ..நீங்கல்லாம் திருந்த மாட்டீங்கடா.. எக்கேடோ கெட்டுப் போங்க. நாள பின்னால நீங்கல்லாம் உக்கார சீட்டு இல்லாம நின்னுகிட்டேத்தான் வண்டியோட்டனும்னு சொல்வாய்ங்க.. அப்பவும் தலையாட்டிட்டே இருங்க.. நான் வாரேன் …”

தண்ணிய போட்டுட்டு வந்து என்னத்தையோ ஒளறிட்டு போறாப்பல.. நாம ரூல்ஸ மீறி பொம்மைய மாட்டினதுக்கு களட்டச் சொல்லி சொல்றாய்ங்க .. ஃபைனும் போட்டாய்ங்க.. கட்டிட்டு போயிட்டேயிருப்போமில்ல? அதை விட்டுபுட்டு, செண்ட் அட்டைய ஏன் களட்டச் சொல்லல, ஸ்டிக்கர ஏன் பிக்க சொல்லலேனெல்லாம் கேட்டுகிட்டிருக்க முடியுமா?

அதுசெரி… அந்த பக்கி சொல்லிட்டு போன மாரி உக்கார சீட்டு இல்லாம நின்னுகிட்டு வண்டியோட்ட சொல்வாய்ங்களா என்ன?

நீங்க என்ன சொல்றீக?

– விளாங்குடி வேலாயுதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad