எழுதுங்கள் வெல்லுங்கள்
மேற்காணும் இரண்டு படங்களையும் பார்த்தவுடன் என்ன தோன்றுகிறது? உங்களின் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள். மனதில் தோன்றுவதை கவிதை வடிவில் எழுதி சமர்ப்பிக்கவும். எல்லாப் போட்டிகளுக்கும் உள்ளது போல சில விதி முறைகள் கீழே;
- படைப்புகளைச் சமர்ப்பிப்பதற்குக் கடைசி திகதி: 02/15/14.
- உங்களது படைப்பு இதற்கு முன் இணையத்திலோ பத்திரிகையிலோ வெளியாகி இருக்கக் கூடாது.
- கவிதை வடிவமாக இருத்தல் அவசியம்
- மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைகூ என்று எந்த வடிவத்தில் இருப்பினும் சரியே.
- இருபது வரிகளுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்
- பிற மொழி வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டும்
- அரசியல், ஆபாசம் மற்றும் பொதுவான கண்டனத்துக்குரிய கருத்துக்களைத் தவிர்க்கவும்.
- ஆசிரியர் குழுவால் சிறந்த கவிதைகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் முதலிரண்டு கவிதைகளுக்குப் பரிசுகள் உண்டு.
- சொல்லாட்சி, சொல் நயம், பொருட் செறிவு, நயமான நடை, இதமான சந்தம், கருத்துச் செறிவு மற்றும் இந்தப் படங்களுடனான தொடர்பு ஆகியவற்றைக் கொண்டு கவிதைகளின் தரம் பரிசீலிக்கப்படும்.
- ஆசிரியர் குழுவின் முடிவு இறுதியானது.
தொன்மையான நம் தாய் மொழியில் சொற்களுக்கா பஞ்சம்? உங்களைப் போன்ற தமிழார்வலர்களுக்கு கவிநயமா பஞ்சம்? உங்கள் திறனனைத்தும் கூட்டி நற்பாக்களை எழுதி அனைவரையும் மகிழ்வியுங்கள். அதனுடன் பரிசுகளை வெல்லும் வாய்ப்பினையும் பெருவீர்.
படைப்புகளை இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
வாழ்த்துக்கள்.
ஆசிரியர் குழு.
கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்… உங்களின் கவிதை போட்டிக்கும் பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்…