என் காதலே
காதல் காவியம் படைத்தேன் உனக்கு
கண்ணே அருகில் வாராய்
உயிரெனும் ஓவியம் வடித்தேன் உனக்கு
உயிரே நீயும் பாராய்
மின்னும் விழிகளின் அழகைப் பார்த்து
விண்மீன் மறைந்தது ஓடி
ஒளிரும் உன்முகம் இரவினில் பார்த்து
நிலவும் தோற்றது போடி
கன்னம் தோன்றிய சிவப்பினைப் பார்த்து
வண்டும் விரைந்தது நாடி
வண்ணம் பூசிய இதழ்களைப் பார்த்து
முகையும் விழுந்தது வாடி
சற்றென வளையும் புருவங்கள் சேர்த்து
பல நெத்திலி பிடித்திடலமோ
முத்தென மின்னும் பல்தனைக் கோர்த்து
பொன் சங்கிலி பின்னிடலாமோ
நெற்றியில் பொலிவுடன் வட்டமாய்க் குங்குமம்
வண்ணத்துக் கோலங்கள் தானே
உச்சியில் வகிடை நிரப்பிய குங்குமம்
வைத்தது யாரது நானே
மொத்தம் அழகினைக் குத்தகை எடுத்தவள்
உன் உள்ளத்தின் நிறமோ வெள்ளை
இத்தகை அழகைப் பெற்றவர் யாரோ
உன்னிகர் உலகினில் இல்லை
இத்தனை அழகை முற்றிலும் பார்த்து
பித்தெனத் திரிந்தேன் நானே
பட்டதும் உன்னைத் தழுவிய காற்று
இதயத்தைத் தொலைத்தேன் நானே
கோடையில் வாடிய சருகாய் இருந்தேன்
துளிர்க் காதலை புகுத்தியவள் நீயே
முடியாக் காவியம் போல நான் இருந்தேன்
என்னை முற்றிலும் முடித்தவள் நீயே
– ராகவன் பத்ராசலம்
Tags: love