முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 1
தமிழில் இப்பொழுது வாரத்திற்கு நான்கு ஐந்து திரைப்படங்கள் வெளி வருகின்றன. அதில் முக்காவாசி பார்ப்பதற்குச் சகிப்பதில்லை.. நல்ல தரமான படங்களும் வருகின்றன மறுப்பதற்கு இல்லை. சில தரமான திரைப்படங்களும் வணிக ரீதியாக தோற்றுப் போகின்றன. ஒரு பொதுப் பார்வையாளனாகப் பார்க்கும் போது, நல்ல படம் எடுக்கத் தெரியாமல் பணத்தைத் தண்டம் செய்கின்றார்கள் என்று தோன்றுகிறது. அதே சமயம் மிகத் தரமான படங்கள் எடுத்து பண விரையம் செய்பவர்களும் உண்டு. நம்முடைய படைப்பாளிகளின் தரமும் உயர்த்தப் பட வேண்டும், நம் பொதுமக்களின் ரசனைத் திறனும் உயர்த்தப்பட வேண்டும்.
கம்பனும் வள்ளுவனும் இளங்கோவும் இலக்கியத்தில் ஆட்சி செய்த பரம்பரையில் வந்த படைப்பாளிகளால் இன்று சொந்தமாக கதை எழுதி வெற்றி பெற முடியாமல் போனதேன்? நல்ல படைப்புகளை ரசிக்கச் சமூகம் தவறுவது ஏன்?
போதிய பயிற்சி இன்மையே முக்கியக் காரணமாகத் தோன்றுகின்றது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு கலையைச் செய்வதற்கு எப்படி கற்பிக்கப்படுகின்றதோ அதே போல அதை ரசிப்பதற்கும் பாடங்களும் நடத்தப்படுகின்றன. திரைப்படங்களை எவ்வாறு ரசிப்பது என்று வகுப்பறைகள் எல்லா ஊர்களிலும் நடத்தப்படுகின்றன. இதுவும் ஒரு வியாபார உக்தி. தொழிலை மேம்படுத்தி வளர்க்க இது போன்ற உக்திகளை அரசாங்கமும் அந்தத் தொழில் சார் நிறுவனங்களும் முன் வந்தால் இன்று இருக்கும் வியாபாரத்தை விட பன்மடங்கு விரிவாக்க முடியும் மக்களின் ரசனைத் திறனும் உயர்த்தப்படும்.
மேலே நான் கூறியதற்கும் இந்தத் தொடருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்தத் தொடரில் நான் பார்த்து ரசித்த எல்லா மொழி பேசும் மற்றும் பேசாப் பழைய திரைப்படங்களையும் மற்றும் பழைய குறும் படங்களையும் தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கு அறிமுகமாக எழுதலாம் என்று நினைக்கின்றேன்.
முதலாவதாக நான் எடுத்துக்கொண்ட குறும்படம்
நிலாவிற்கான ஒருப் பயணம் (A Trip to the Moon (eng.), Voyage dans la Lune(Fr.))
இந்த இந்த திரைப்படம் வந்து சுமார் 112 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. இப்படத்தின் திரைக்கதை, இயக்கம் மற்றும் தயாரிப்பு ஜியோர்கஸ் மெல்லிஸ் (Georges Méliès), இது ஒரு ஊமைப்படம்.படத்தின் நீளம் 10 நிமிடங்கள்
கதைச்சுருக்கம்:
பூமியிலிருந்து ஆறு பேர் கொண்ட குழு நிலவிற்குச் சென்று திரும்புவது அங்கே அவர்கள் சந்திக்கும் பிரச்சினையிலிருந்து எப்படித் தப்பி பூமி திரும்புகின்றனர் என்பது தான் கதையின் சுருக்கம்.
கதை மாந்தர்கள்:
அறிவியல் கழகத் தலைவர் ஜியோர்கஸ் மெல்லிஸ், ஐந்து நிலவுக்கான பயணிகள், பிறை நிலவில் அமர்ந்திருக்கும் பெண், நிலவில் வசிக்கும் மனிதர்கள் அவர்களின் தலைவன் மற்றும் ராக்கெட்டின் தலைவன்
கதை:
நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் தேர்ந்தெடுத்த கதைக் களம் மிக வித்தியாசமானது. காட்சிக்குக் காட்சி வித்தியாசமான சிந்தனை. ஒரு அறிவியல் கழகத்தில் நிலவிற்குச் செல்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அதன் படி ஒரு அறை கூம்பு வடிவ ராக்கெட் தயாரிக்கப்படுகின்றது. நிலவிற்கான பயணிகளுக்கு அணி வகுப்புகள் செய்யப்படுகின்றன. நிலாப் பயணிகள் அதில் ஏறியவுடன் அந்த ராக்கெட் ஒரு நீண்ட பீரங்கிக் குழாயில் பொருத்தப்பட்டு பீரங்கி வெடிக்க வைக்கப்படுகின்றது. பயணிகள் நிலவில் இறங்குகின்றனர், அங்கு அவர்கள் உறங்கும் பொழுது பிறை நிலாப் பெண் அவர்கள் மீது பனி தூவுகின்றாள். விழித்த அவர்கள் நிலவின் அடியில் பயணிக்கின்றார்கள்..அங்கு அவர்கள் நிலவில் வசிக்கும் மனிதர்களால் தாக்கப் படுகின்றனர். பின் நிலாப் பயணிகள் நிலவில் வசிக்கும் மனிதர்களின் தலைவனிடம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்களிடமிருந்து எவ்வாறு தப்பித் திரும்பி இவர்கள் அனைவரும் பூமி வந்து சேருகின்றனர் என்பதை இந்தக் குறும்படம் பார்த்துத் தெரிந்துக்கொள்ளுங்கள். இந்தப் படத்தை YouTube மூலம் பார்த்து ரசிக்கலாம். Youtube முகவரி
இப்படத்தின் சிறப்பு அம்சங்கள்
அரங்க அமைப்பும் தந்திரக் காட்சிகளும். அன்றைய தொழில் நுட்பத்தில் புகையாய் மறையும் மனிதர்களைப் படமாக்கி இருப்பது மிக
அடுத்த இதழில் இருந்து இரு திரைப்படங்களை அறிமுகம் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளேன். இது விமர்சனத்திற்கான தொடர் அல்ல. பழைய நல்ல திரைப்படங்களை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்வதற்கான ஒரு தொடர் இது.
-சத்யா-