\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

யாழ் தமிழ் – சென்னைத் தமிழ் (பாகம் – 1)

yarl-chennai-tamil_520x367ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் பேசப்படும் மொழி தமிழாக இருப்பினும் இரண்டுக்கும் இடையில் பெரியளவிலான உச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். ஈழத்திலும் பிரதேசத்துக்குப் பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் உண்டு. ஆனால் ஈழத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பல சொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். எனக்கு நன்கு பரிச்சயமான யாழ்ப்பாணத் தமிழுக்கும், சென்னையில் வசித்த காலத்தில் பேசிய சென்னைத் தமிழுக்கும் இடையிலான சில சொல் வேறுபாடுகளைப் புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன். ”மொழி என்பது ஒன்றை அடையாளப் படுத்தும் கருவி ” என்ற சீரிய கொள்கை உடையவன் நான். ஆதலால் இங்கு எது சரி எது பிழை என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் நான் இருந்துகொள்ள ஆசைப்பட்டு இதனைத் தொடர்கிறேன்.

(முக்கிய குறிப்பு – இவை என்னால் அவதானிக்கப் பட்ட சொற்கள் மட்டுமேயன்றி ஆய்வல்ல. சில சொற்கள் தமிழ் அல்லவெனினும் தமிழ்போல் வழங்கப்பட்டு வருகின்றமையால் நானும் அப்படியே சொல்லியுள்ளேன்.)

யாழ்ப்பாணத் தமிழ்ச் சொற்கள் சென்னைத் தமிழ்ச் சொற்கள்

இருங்கள்                                                  உக்காருங்கள்

( காப்பி )குடியுங்கள்                              சாப்பிடுங்கள்

சுகமா இருக்கிறீங்களா?

நல்லா இருக்கிறீங்களா?,                    சௌக்கியமா?

கெதியாய்                                                 சீக்கிரம்

நக்கல், நையாண்டி, பகடி                    காமெடி, கிண்டல்

சும்மா இருக்கிறேன்                             வெட்டியா இருக்கிறேன்.

செய்                                                            பண்ணு

கதை                                                                      பேசு

பேசு                                                        திட்டு

ஓம்                                                             ஆம், ஆமாம்

விருப்பம்                                                  பிடிக்கும்

விளங்கேல்லை                                     புரியலை

பிறகு அல்லது பேந்து   அப்புறம்

தாள்க்காசு                                                நோட்டு

பெண்                                                      பொண்ணு

ஆண்                                                          பையன் அல்லது பிள்ளை

குழப்படி                                                     குழப்பம்

சத்தம் போடாமலிரு                            ‘கம்’முனு இரு

நல்ல பிள்ளை                                         சமத்து

குறைய அல்லது கொஞ்சம் கம்மி

கூட                                                             ஜாஸ்தி

எங்கே போறீங்கள்?                               எங்க கிளம்பிட்டிங்க?

கதவச் சாத்து அல்லது பூட்டு   கதவ மூடு

திறப்பு                                                        சாவி

மச்சம்                                                        கவுச்சி

வாளைமீன்                                          முள்ளுவாளை

சூடைமீன்                                                 கவளை மீன்

சாதாளை                                                  வாளைமீன்

துள்ளுமண்டன்                                      சங்கரா

றால்                                                           இறா

அறக்குளாய்                                            வஞ்சிரம்

இன்னும் வளரும்…

-ஊர்க்காரன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad