தீங்கற்ற வீட்டு விலங்கு
நான் முதலில் மூச்சு விட ஆரம்பித்த போது
என் தந்தையிடம் கூறினீர்கள்…
“சேமிக்கப் பழகிக்கொள்” என்று,
எனது ஐந்து வயதில் கூறினீர்கள்…
“எழுதப் படிக்கப் பழகிக்கொள்” என்று,
எனது பத்து வயதில் கூறினீர்கள்…
“பிறரை எதிர்பார்த்து வாழாதே” என்று,
எனது பதினைந்து வயதில் கூறினீர்கள்…
“வீட்டில் இருந்து சமைக்கப் பழகு” என்று,
எனது இருபது வயதில் கூறினீர்கள்…
“உன் வாழ்க்கை உன்கையில்” என்று,
நாட்கள் கழிந்தன…
நீங்கள் கூறியது போல் நானும் வாழ்ந்தேன்
என்னைப் பற்றி யாரும் குறை கூறவில்லை
இதுவரை மனிதர்குலம் பார்த்த விலங்கிலேயே
துளிகூட “தீங்கு இல்லாத வீட்டு விலங்கு நானே!”
நானே!! பெண்!!!…
ம.லோகப்பிரியா II-B.A(English). வள்ளுவர் கல்லூரி