\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இன்றைய தகவல் உலகில் நேற்றைய தகவல் முக்கியமா?

netru-inru_620x877காலவரை என்னும் சொல் இயக்கத்தில் முடிவிலியான  இன்றைய மின்னியல் நூற்றாண்டிலே ஒரு கேள்விக்குறியே.

நேற்று, இன்று என்ற குணாதிசயங்கள்  தகவல் அறிவியலில் தொடர்ந்தும் முக்கியத்துவம் வகிக்கின்றனவா என்று நாம் எடுத்துப்பார்க்கலாம். தொடர்ந்து இக்கட்டுரையில் மின்னியல் மற்றும் இலத்திரனியல் நூற்றாண்டு என்ற சொற்கள் ஒரே கருத்தைத்தான் குறிக்கும்.

அசலும் அதன் இலத்திரனியல் நிழல்களும்

காலவரையானது படைக்க பட்ட அசல் பொருட்களைப் பெரும்பாலும் கொண்டு அமைந்த ஒரு சிந்தனை.  ஒரு பொருளின் அசல் தன்மையானது அது உற்பத்தி செய்யப்பட்ட நாளில் இருந்து அதன்  உருவகம், உபயோகிப்பு மற்றும் இயற்கை அம்சங்களினால் தேய்வுறுவதை மையமாக வைத்த எண்ணம்.

ஆயினும் அசல் பொருள்வடிவங்கள் இலத்திரினியல் நிழல்களாக மாறும் போது அவற்றின் காலவரைச் சிதைவு என்ற நிலையும் அகன்றவாறுள்ளது.

எனவே இந்த நூற்றாண்டில் தகவலை நுகர்வோருக்கு  நேற்று, இன்று என்ற வித்தியாசங்களைத்   தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இலத்திரனியியல்  நூற்றாண்டில் தமிழன்

தமிழ்க் கலாச்சாரத்தைப் பொறுத்தளவில் சமுதாய ரீதியில் நமக்குத்தெரிந்த வரலாறு ஏறத்தாழ 10,000 ஆண்டுகள் எனலாம்.

ஆயினும் நடைமுறை வாழ்க்கையில் தமிழர் வாழ்வதற்கு இத்தகவல் தரவுகள் யாவும் உடன் உபயோகமாவது  இல்லை. எனவே இலத்திரனியல் நூற்றாண்டில் வாழும் தமிழர் சொற்ப அருகாமைத் தகவலை வைத்தே வாழ்கையை நடத்துகிறர் எனலாம்.

இதன் தலையாய காரணம் கலாச்சாரப்புறக்கணிப்பு அல்ல, நிதவாழ்க்கை வரையறுப்புக்குத்தேவையான தகவல்கள் மிக சொற்பகாலத்திற்குள் உரியவையே. சுமாராக சில நூற்றாண்டுகளுக்குள் பெறப்பட்ட தரவுகளே.  நாம் அன்றாட முடிவுகள் எடுக்க இது  போதுமானது எனலாம்.

பொதுவாக  அறிவியலை எடுத்துப் பார்க்கும் போது மின்னியல் நூற்றாண்டில் எமக்குப் பிடித்த பழைய, புதிய ஒலி, ஒளிப்பதிவுகளையோ , அச்சுப்பிரதியில் பல்லாண்டுகள் முன் அகன்று, அழிந்துப்  போன அறிவியல் புத்தகங்கங்களையோ  மீளவும் இலத்திரனியல் நிழல்களாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளன. இது எமது இன்றைய நாகரீகப்பரிணாம வளர்ச்சியின் ஒருபயன் எனலாம்.

நேற்று என்பது இன்றில்லாத ஒரு வழிமுறை

ஒரு காலத்தில் மனப்பாடத்திற்கு அடுத்த படியாக  கையெழுத்துப் பிரதிகளே அறிவைப் பரப்பும் சாதனங்களாக அமைந்தன. ஆயினும் அச்சுப்பிரதிகள் வந்தபோதும் அவற்றை பயன்படுத்தியவர் குறைவாகவே இருந்தனர்.

மின்னியல், அச்சுப்பிரதி பரவல் சில காலங்கள் கற்றவர் சிலர் கல்லாதவர் பலர் என்ற சூழ்நிலையிலேயே செயல்பட்டது.

எனவே அக்காலத்திலும் விபரம் தெரிந்த நுகர்வோர் மனப்பாடம் செய்வதில் தாம் அக்கறைகாட்டினர். இந்த அறிவியலும் உலகத்தில் ஒரு சிலர் மாத்திரமே பெறக்கூடியவையாகவும் அமைந்திருந்தது.

மண்ணச்சுச் சுவடுகள், கற்பாறை, மரச்சுவட்டுச் செதுக்கல்கள் தாண்டி மை எழுத்துப் பப்பிரஸ் புற்களிலும், பனை எழுத்தோலைகள் வடிவிலும்  வந்த பொழுது அறிவியல் தகவலின் காலவரைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இவற்றின் காரணங்கள் இந்த மனித அனுபவ அறிவியல் குறிப்புக்கள் வருங்காலச் சந்ததிகளைப் போய்ச்சேராது காலத்திற்கு இரையாகிவாறு இருந்ததும், அவற்றை தொடர்ந்தும் பேண நினைத்த மனிதர் அபிலாசைகளுமே.

காலவரையை நீட்டித்த, பரவிய அச்சுப்பிரசுரங்கள்

மனித ஆற்றல்களைப்,  தெரிந்த அறிவைப் பரந்தளவில் பதிந்து வைக்க மென்மேலும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. சீன நாகரீக தட்டச்சு முறை, ஜேர்மானிய கூட்டன்பேர்க் அச்சக இயந்திரமயமாக்கம்  போன்றவை இதற்கான சிறப்புதாரணங்கள்.  இந்த சிறப்புக் கண்டுபிடிப்புக்கள் அச்சுப்பிரதி உற்பத்தியை ஓங்கவைத்தது. பிரசுரப்பதிப்புக்கள் பெரும்பான்மையாகி, புத்தகங்கள், செய்திப் பத்திரிகைகள் கி.பி. 1800ம் நூற்றாண்டுகளில் பிரபல்யமானது. இக்காலகட்டத்திலும் தகவல் சேகரிக்கபடும் நேரகாலம், பதிக்கப்படும் காலவரைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அறிவியல் தகவல் வேலிகள்

உலகளாவிய ரீதியில் வர்த்தக பயணங்கள் ஆரம்பித்ததும் கலாச்சார அறிவியல் பொக்கிஷங்களும் அவற்றின் முக்கியத்துவப்படி வர்த்தகப்பண்ட மாற்று விலைகளையும் பெற்றன எனலாம். எனவே காலாகாலத்தில் கலாச்சார, வரலாற்று அறிவியல் படைப்புக்களும் வர்த்தக ரீதியில் ஒரு சில சேகரிப்பு வியாபாரிகள் இலாபம் பெறும் வகையில் பொதுமக்களிற்கு அப்பால் பூட்டிவைக்கப்பட்டிருந்தன. எனவே அறிவியலைப் பெறுவதில் சாதாரண நுகர்வோர் செலவு ரீதியில் மட்டறுக்கப்பட்டனர்.

அறிவியல் ஏடுகள் சென்ற நூற்றாண்டுகளில், ஏன் சில தசாப்தங்களின் முன்பு வரை உலகில் ஒரு சில அரசியல்பொருளாதார விடயங்களில் சக்திவாய்ந்த நூல்நிலையங்கள், நூதனசாலைகளிலேயே பாதுகாக்கப்பட்டு வந்தன. அறிவியல் சேகரிப்புக்களில் மிகச் சொற்பமானவையே புழக்கத்தில் விடப்பட்டன.

மின் இணையதளங்களும் அவை தந்த தகவலின் விடுதலை

எனினும் அண்மைக்காலத் தசாப்தங்களில் இலாபரீதியில் செயல்படாத அறிவாளர்கள், உலகளாவிய பல்கலைக்கழக சுயாதீன சிந்தனையுள்ள புத்திஜீவிகளின்முயற்சிகளாலும் பூட்டி வைக்கப்பட்ட கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இலத்திரினியல் நூற்றாண்டில் மின்வலை இணையதளங்கள் மூலம் தகவல்கள் எவரும் பெறும்  உரிமையை உலகளாவில் தந்துள்ளது எனலாம்.

தற்போதைய நுகர்வோரின்  தகவல் சார்ந்த நிலைப்பாடு அவர்கள் தமது மூதாதையரிடமிருந்து  முரணானது  எனலாம். அதாவது இன்று சாதாரண வாழ்க்கையில் சிந்தித்து முடிவெடுப்பதற்கு அதிக தகவல்கள் உண்டு. மேலும் நுகர்வோரின் தகவல் கிரகிக்கும் ஆற்றலையே மூழ்கடிக்கும் அளவு தகவல் தரவுகள் அமைந்தவாறுள்ளன. இதன் பிரதிவிளைவுகள் பல அவற்றில்  ஒன்று அறிவியல் தொடர்பான தகவலின் காலவரைப் பேதத்திற்கு முக்கியத்துவம் தேவையில்லாமல் போவதும் எனலாம்.

அறிவியல் தகவலின் பெரும்பதிவுச் சுவடுகள்

இன்று யாகு, பிங், மற்றும்  பெரும் தகவல் தேடல் தாபனமாகிய கூகிள், ஆக்கைவ் டோட் ஓர்க் Archive.org போன்ற தாபனங்கள் கோடானுகோடி பழைய அறிவியல் ஆக்கங்களை இலத்திரனியல் நிழல்களாக அதிவிரைவில் மாற்றிவருகின்றன.

அதே போன்று அமேசான் தாபனம் பழைய, புதிய புத்தகங்களை படிப்புப் பலகையாக மாற்றியும், நெட் பிளிக்ஸ், அப்பிள், யூரூப் போன்றவை பிரமாண்டமான ஒளி, ஒளிப்பதிவு நிழல் களஞ்சியங்களையும் உலகளாவிய வகையில் உருவாக்கியுள்ளன.

இத்தாபனங்கள் சென்ற தசாப்தங்களில் உலகளாவிய பெரும் அரச நிறுவனங்கள் செய்ய முடியாதவற்றை செய்து சாதித்தவாறுள்ளன. இதன் பிரதிவிளைவுகள் பல. இவையாவும் வர்த்தக ரீதியில்  தாம் அமைந்துள்ளன என்று சிலர் வாதாடலாம், ஆயினும் இலத்திரினியல் நூற்றண்டில் பொதுமக்கள் அறிவியல் தகவல் பெறச்  செலவிடும் பணம், சென்ற தசாப்பத்தங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது புறக்கணிக்கக் கூடியதொன்றாகும்.

நேற்று இன்று என்ற நிலைப்பாடு தேவைப்படுகிறதா?

இலத்திரனியல் நிழல்களாக மாறிய தகவல்களை நாம் உபயோக ரீதியில பார்த்தோமானால் இன்னும் பல புதிய விளைவுகளை அவதானிக்கலாம். அதாவது இலத்திரனியல் நூற்றாண்டில் பிறந்தவர்களைப் பொறுத்தளவில் தகவலிற்கும் தரும் முக்கியத்துவங்களும் மாறியுள்ளன எனலாம். அதாவது நடைமுறை வாழ்க்கையில் சென்ற பல நூற்றாண்டுகள் போன்று நாம் எமக்கருகில் கிடைக்கும் தகவல்களை வரலாற்று ரீதியில் நேற்று, இன்று என்று பார்ப்பதில்லை. தகவல் தேவையானால் மின்னியல் ஊடகத்தினூடு வேண்டிய போது பெற்றுக்கொள்வோம். தகவலின் வரலாற்றுத் தொகுப்பு பெரும் பொருட்டாக எடுத்துக்கொள்வது குறைவு. அதில் நாட்டமும் வேறுகிடையாது.

இன்றைய கால நுகர்வோர் எம்மைப்போன்ற மற்றவர்கள் பெறும் தகவலில் எவ்வளவு நாட்டம் கொண்டுள்ளார்கள் என்பதில் தராதரம் செலுத்துவோமே ஒழிய நேற்று, இன்று என்றதி்ல் முக்கியத்துவம் கொடுப்பது குறைவு.

இதற்கு ஒரு காரணம் தற்போதைய சூழ்நிலையில் தகவலானது உடன் உபயோகமானதா இல்லையா என்பது முக்கியத்துவம் பெறுகிறது காலவரை ஒரு பிரத்தியேகமான கணி்ப்பு. எனவே அறிவியல் தகவலில் பழமை, வரலாறு, நேற்றையது  என்ற குணாதிசயங்கள் மின்னியல் நூற்றாண்டு வாசிகளுக்கு அவ்வளவு முக்கியமானதாகத் தெரியவில்லை.

-யோகி

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. லெட்சுமணன் says:

    முதலில் இவ்வளவு தகவல்களே தேவை இல்லை. தெளிவின்மை தான் அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad