யாழ் தமிழ் – சென்னைத் தமிழ் (பாகம் – 2)
ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் பேசப்படும் மொழி தமிழாக இருப்பினும் இரண்டுக்கும் இடையில் பெரியளவிலான உச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். ஈழத்திலும் பிரதேசத்துக்குப் பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் உண்டு. ஆனால் ஈழத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பல சொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். எனக்கு நன்கு பரிச்சயமான யாழ்ப்பாணத் தமிழுக்கும், சென்னையில் வசித்த காலத்தில் பேசிய சென்னைத் தமிழுக்கும் இடையிலான சில சொல் வேறுபாடுகளைப் புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன். ”மொழி என்பது ஒன்றை அடையாளப் படுத்தும் கருவி ” என்ற சீரிய கொள்கை உடையவன் நான். ஆதலால் இங்கு எது சரி எது பிழை என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் நான் இருந்துகொள்ள ஆசைப்பட்டு இதனைத் தொடர்கிறேன்.
(முக்கிய குறிப்பு – இவை என்னால் அவதானிக்கப் பட்ட சொற்கள் மட்டுமேயன்றி ஆய்வல்ல. சில சொற்கள் தமிழ் அல்லவெனினும் தமிழ்போல் வழங்கப்பட்டு வருகின்றமையால் நானும் அப்படியே சொல்லியுள்ளேன்.)
யாழ்ப்பாணத் தமிழ்ச் சொற்கள் ———- சென்னைத் தமிழ்ச் சொற்கள்
தடி———-குச்சி
சூப்புத்தடி———-குச்சி மிட்டாய்
ஐஸ்பழம்———-குச்சிஐஸ்
இனிப்பு———-தித்திப்பு
கைப்பு———-கசப்பு
உறைப்பு———-காரம்
பின்னேரம்———-சாயந்திரம்
மத்தியானம்———-மதியம்
இடம்———-லெப்டு
வலம்———-ரைட்
அவியவை———-வேகவை
தேத்தண்ணி ஊத்து———-காப்பி கல
சோறு———-சாதம்
சம்பல்———-துவையல்
காலை/ மாலை உணவு———-டிபன்
அடுப்பு மூட்டு———-அடுப்பு பத்தவை
வறை———-பொரியல்
பொரியல்———-வறுவல்
பாண்———-ரொட்டி/ பிரட்
ரொட்டி———-சப்பாத்தி
அப்பம்———-ஆப்பம்
இன்னும் வளரும்… -ஊர்க்காரன் –