உமா மகேஸ்வரி
சங்கமம் 2014 தெருக்கூத்து நிகழ்சியின் அணிகலன்கள் வடிவமைப்பாளரும் ஒப்பனையாளருமான திருமதி உமாமகேஸ்வரி அவர்களை மின் அஞ்சல் மூலமாக ஒரு பேட்டி கண்டோம்.அவர் வடிவமைத்திருந்த அணிகலன்கள் மற்றும் ஒபனைகள், நிகழ்சியை கண்டுகளித்த அனைவரது பாராட்டையும் பெற்றது.
1. உங்களைப் பற்றியும் உங்கள் ஊர், குடும்பம் மற்றும் வளர்ந்த சூழல் பற்றி எங்கள் பனிப்பூக்கள் வாசகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்?
என் பெயர் உமாமகேஸ்வரி .
எனது ஊர் மதுரை. எனக்கு மூன்று அண்ணன்மார்கள் உள்ளனர். எங்களுக்கு ஒரு மகன் (13 வயது) மற்றும் ஒரு மகள் (10 வயது). எனது கணவர் பெயர் வெங்கடசுப்ரமணி. அவர் இந்த தெருக்கூத்தில் சோழ மன்னராக நடித்து இருக்கிறார்.
2. உங்க ஊர்ல நீங்க
தெருக்கூத்தைப் பார்த்து இருக்கீங்களா?
உண்மையாக சொல்ல வேண்டும்
என்றால் நான் தெருக் கூத்தினை நேரில் கண்டதில்லை. திரைப்படம் மற்றும் காணொளிகளில்
மட்டுமே பார்த்து இருக்கிறேன். இதை நேரில் பார்க்க வாய்ப்பு அளித்த மூவேந்தர் கலைக்குழாமிற்கு
மிக்க நன்றி.
3. உங்களுடைய அமெரிக்க
வாழ்க்கைப் பற்றி எங்களுடன் பகிர்ந்துக்கொள்ள முடியுமா?
நான், எனது கணவர் மற்றும் இரண்டு
குழந்தைகளுடன் மினசோட்டாவில் ரோஸ்மௌன்ட் சிட்டியில் வசித்து வருகிறேன். நாங்கள் அமெரிக்கா வந்து கடந்த பத்து
வருடங்களாகிறது. Web Application developer ஆக பணியாற்றி வருகிறேன்.
4. தெருக்கூத்திற்காக
பாட்டு பாடியிருக்கீங்க, விவாதங்கள்ல
கலந்துகிட்டிருக்கீங்க, பட்டிமன்றத்தில
பேசறீங்க. இப்படி பன்முக திறமையாளரான நீங்க தெருக்கூத்திற்காக வடிவமைத்த ஆபரணங்கள்
பத்தி சொல்ல முடியுமா?
எனக்கு இவ்வளவு முகம் இருக்கிறது என்றே நீங்கள்
சொல்லித்தான் தெரியும். முதலில் இந்த பணி சற்று கடினமானது என்றுதான் நினைத்தேன்.
ஆனால் நாளடைவில் அது எனக்கு மிகவும் பிடித்தமானதாகி விட்டது. நிறைய நாட்கள் இரவு
நேரங்களில் பொழுது போவதைக் கூட அறியாமல் செய்யும் அளவிற்கு என்னை இப்பணி கவர்ந்து
விட்டது. வலைத்தளங்களில் மாதிரி வடிவங்களைப் பார்த்து நான் வடிவமைக்க
ஆரம்பித்தேன். எதோ என்னால் முடிந்ததை செய்தேன். அதை அனைவரும் பாராட்டும் போதுதான் அதன்
சிறப்பு தெரிந்தது.
5. தெருக்கூத்திற்கான
ஒப்பனையிலும் நீங்க பெரும் பங்கு வகித்ததாக சச்சிதானந்தம் கூறினார். ஒப்பனைக்காக
என்ன மாதிரியான பொருட்களை பயன்படுத்தினீங்க? அந்த பொருட்கள் எல்லாம்
மினசோட்டாவிலேயே கிடைத்ததா?
எனக்கு என்றுமே ஒப்பனை செய்து
விடுவதில் ஆர்வம் உண்டு. என் மகளுக்கு
பரதநாட்டியத்திற்கு நான் தான் ஒப்பனை செய்து விடுவேன். அது போல நினைத்து இதற்கும் செய்தேன். ஒப்பனைப் பொருட்கள் அனைத்தும் இங்கே வாங்கியது தான். அந்தப் பணியை செய்தது நண்பர் கார்த்திக் அவர்கள் தான் என்று நினைக்கிறன்.
6. தெருக்கூத்திற்கான ஒத்திகையின் போது நடந்த சுவையான நிகழ்ச்சிகளை ஏதேனும் சொல்ல முடியுமா?
ஒன்றல்ல நிறையச் சம்பவங்கள்
உள்ளது. வார வாரம் அனைவரும் ஒன்று கூடி கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்ந்தோம்.
தெருக்கூத்துப் பயிற்சி முடித்த பிறகு மீண்டும் எப்போது
இது போல சந்திப்போம் என்று காத்திருந்தோம். நினைவுக்கு வரும் ஒரு நிகழ்ச்சி
இது : ஒவ்வொரு வாரமும் தேனீர் அருந்துவோம். அப்போது ஒருநாள் கட்டியக்காரராக
நடித்தவர் “தேனீரில் இஞ்சி போட்டிருக்கலாம்” என்று சொன்னார் “போட்டிருக்கிறது” என்று நாங்கள் சொன்னோம். அதற்கு அவர் “ஓ அப்படியா ஹ்ம்ம் தெரியவே இல்லை
என்றும் மேலும் சிறிது ஏலம் சேர்த்து இருக்கலாம்” என்றும் கூறினார். அதற்கு நாங்கள்
“இப்படியே பேசி கொண்டு போனால் அடுத்த வாரம் தேனீர் போட்டிருக்கலாம் என்று நீங்கள்
சொல்லும் படி ஆகி விடும் ஜாக்கிரதை” என்று சொன்னோம்.
7. இதேப் போல நாடகம், நாட்டிய நாடகம் மற்றும்
குறும்படம் எடுப்பவர்கள் ஒப்பனைக்காக உங்களை அணுகினால் உதவி செய்வீர்களா?
அவர்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கான மின்னஞ்சல் முகவரியைத் தர இயலுமா?
கண்டிப்பாக என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். என் மின்னஞ்சல் முகவரி uvmani@gmail.com.