\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 2

movie_pearls_520x358பன்னிரெண்டு கோபக்கார மனிதர்கள்(12 Angry Men)

இந்த இதழில்  பன்னிரெண்டு கோபக்கார மனிதர்கள் (12 angry men) என்ற நாடக வகையைச்  சேர்ந்த ஆங்கிலத்  திரைப்படத்தைப்  பற்றி பார்ப்போம்.

இந்த திரைப்படம்  யுனைட்டட் ஆர்ட்டிஸ்ட்ஸ் என்ற நிறுவனத்தினரால்   ஏப்ரல் 04 1957ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதை தயாரித்தவர்கள ஹென்றி ஃபொண்டா மற்றும் ரெஜினால்ட் ரோஸ். போன அத்தியாயத்தில்  நாம நிலாவிற்கு சென்று வந்த கதையைப் பார்த்தோம்.

இந்த படம் ஒரே அறைக்குள்  நடக்கின்ற கதை. இயக்குநர் பாசு சாட்டர்ஜீ இத் திரைப்படத்தை ஏக் ரூகா ஹுவா பைஸ்லா என்ற பெயரில் இந்தியில் 1986ம் ஆண்டு தயாரித்திருக்கிறார்

கதை சுருக்கம் :

ஒரு கொலைக்குற்றத்தின் தீர்ப்பை பன்னிரெண்டு நடுவர்கள் சேர்ந்து விவாதித்து முடிவெடுப்பதே  கதை.

கதை மாந்தர்கள்:

பன்னிரெண்டு நடுவர்கள்.  அதில் ஒருவர் ஃபோர்மன்  என்று தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் மற்றவர்கள் கொடுக்கும்  தீர்ப்பை உறுதி செய்வார்.

கதை

பதினெட்டு வயது சிறுவன் கொலைக்குற்றம் சாட்டப்படுகின்றான்.

இந்த வழக்கில் தீர்ப்பளிக்க  பன்னிரெண்டு பேர் நடுவர்களாக நியமிக்கப்படுகின்றனர்.அவர்கள்  முழு வழக்கு விசாரணையை கவனித்து, வாதங்களை கேட்டு முடிவில் தீர்ப்பளிப்பார்கள்.

பன்னிரெண்டு பேரும் ஒத்த தீர்ப்பு காணும் வரை அவர்களுக்குள் விவாதம் நடக்கும்.

விவாதம் ஆரம்பமாவதற்கு முன் ஓட்டெடுப்பு நடைபெறும். அதில் அனைத்து  நடுவர்களும், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை, குற்றவாளி என்று முடிவெடுக்கையில், எட்டாவது நடுவர்  மட்டும் அந்தச் சிறுவன் குற்றவாளியில்லை  என்று  கருதுவார்.

அவர், அவனை குற்றவாளியென  ஏற்றுக் கொள்ள மறுப்பதனால் வழக்கு குறித்து கலந்து பேசத் துவங்குவார்கள். இறுதியாக, அனைத்து நடுவர்களும், ஒருங்கிணைந்து, அந்தச் சிறுவனை, குற்றமற்றவனென்று முடிவெடுத்து பிரிவதுடன் கதை முடியும்.

இந்த திரைப்படத்தை youtubeல் பார்த்து மகிழ

https://www.youtube.com/watch?v=RelOJfFIyp8

லூமியர் சகோதரர்களின் முதல் திரைப்படம்(The Lumiere Brothers’ – First films)

இந்தப் படத்தைப்  பற்றியும்,  நடித்த நடிகர்களைப் பற்றியும்  சொல்லுவதற்கு  பெரிதாக ஒன்றும் இல்லை ஆனால் பழைய படங்களைப்  பேசும் இந்த தொடரில்   இது தவிர்க்க முடியாத  ஒரு குறும் படம்.

இது திரைத்துறையின் முதல் முத்து.  சுமார் 20 நிமிடம் ஓடக்கூடிய இந்தப்படம் 10 குறும் படங்களை உள்ளடக்கியது. பாரிஸ் Boulevard Des Capucines கிராண்ட் கஃபே அடித்தள அறையில் இது டிசம்பர் 28, 1895 உலகின் முதல் திரைப்படமாகப்  பொதுமக்களுக்கு  திரையிடப்பட்டது. இந்தப் படத்தில் பொதுமக்களின் அன்றாட நிகழ்வுகள் படமாக்கப்- பட்டுள்ளன.

இந்த படத்தை youtubel பார்த்துமகிழ

https://www.youtube.com/watch?v=JGugm8Dzmuc

https://www.youtube.com/watch?v=LtZORqB_WAM

https://www.youtube.com/watch?v=2Jqzun-kXHA

https://www.youtube.com/watch?v=YPlDpftD5ok

https://www.youtube.com/watch?v=3DIvKLOXZp0

https://www.youtube.com/watch?v=UaHRCRZCyFs

அடுத்த இதழில் வெறொரு  திரைப்படத்தைப்  பற்றி பார்ப்போம்.

தொடரும்

-சத்யா-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad