\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எனது இலட்சியம்

Filed in இலக்கியம், கதை by on June 10, 2014 0 Comments

iladchiyam_620x850அது ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டில் அடுத்தடுத்து மூன்று மரங்கள் வளர்ந்திருந்தன. அவை ஒரு நாள் தங்களின் விருப்பத்தை மனம் விட்டு பகிர்ந்து கொண்டன.

முதல் மரம் சொன்னது…”தங்கம், வைரம் போன்ற செல்வங்களைப் பாதுகாக்கும் நகைப் பெட்டியாக நான் ஆகவேண்டும்!”.. “அதிகாரம் நிறைந்த மாமன்னனை சுமந்து செல்லும் கப்பலாக வேண்டும் என்பதுதான் என் இலட்சியம்” என்றது இரண்டாவது மரம். “நான் விண்ணிலே இருக்கும் கடவைள தொடும் அளவுக்கு உயரமாக வளரவேண்டும். கடவுள் என்மீது இளைப்பாற வேண்டும். அதுதான் என்இலட்சியம்” என்றது மூன்றாவது மரம்.

இப்படி மரங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அந்தக் காட்டுக்குள் விறகு வெட்டிகள் மூன்று பேர் வந்தார்கள். நகைப்பெட்டியாக வேண்மு; என்று நினைத்த மரத்தைக் காட்டி, “இது மிகவும் உறுதியாக இருக்கிறது… இதை வெட்டி நகைப்பெட்டி செய்தால் நன்கு விலைக்கு போகும்” என்று அந்த மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு போனான் முதல் விறகு வெட்டி. தன் இலட்சியம் நிறைவேறப்போவதை நினைத்து அந்த மரம் சந்தோசம் அடைந்தது.

மூன்றாவது விறகு வெட்டி விண்ணைத் தொடும் அளவுக்கு உயரமாக வளரப்போவதாக ஆசைப்பட்ட மரத்ததை வெட்டியதுமே அதன் ஆசை நிராசையாகிவிட அது சோகத்தில் ஆழ்ந்தது.
கப்பலாக ஆசைப்பட்ட மரத்தைப் பார்த்து அடுத்த விறகு வெட்டி, “இந்த மரம் வளைவுகள் எதுவும் இல்லாமல் நேராக இருக்கிறது. அதனால் இதைக் கப்பல் கட்டும் தச்சர்களிடம் விற்றுவிடப்போகிறேன் என்று அந்த மரத்தை வெட்டி எடுத்துக் கொண்டு போனான். கப்பலாக போகும் கனவில் அந்த மரம் மிதந்தது.

சில நாட்கள் ஆயின, நகைப்பெட்டி செய்யப்போகிறேன் என்று மரத்தை வெட்டிக்கொண்டு போனவன் மனதை மாற்றிக்கொண்டான். நகைப்பெட்டிக்கு பதிலாக அந்த மரத்தைக் கொண்டு அவன் மாடுகளுக்கு தீவனம் வைக்கும் பெட்டியைச் செய்தான். அந்த மரம் தன் கனவு சிதைந்து போனதை எண்ணி கலங்கியது.

அடுத்து கப்பல் செய்யப்போகிறேன் என்று புறப்பட்ட விறகு வெட்டி அந்த மரத்தை சாதாரணப் படகு செய்கிறவனிடம் தர அது சின்னப்படகாக உருவெடுத்து இருந்தது. மன்னனை சுமக்கும் ஆசை மண்ணாகிக்போனது குறித்து அந்த மரம் மனம் வெம்பியது.

இறைவனின் திருவடிகளைத் தொட நினைத்த மரம் எந்தவித உபயோகமின்றி ஏதோ ஓர் இருட்டறையில் துயரத்துடன் வீழ்ந்து கிடந்தது.

ஒரு நாள் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி பிரவசத்திற்காக தன் கணவனுடன் வைத்தியர் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். வழியிலேயே அவளுக்கு பிரசவ வலி ஏற்பட, அங்கே இருந்த மாட்டுக் கொட்டகையில் அவர்கள் தஞ்சம் புகுந்தார்கள். அங்கேயே அவள் அழகான ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். கணவன், அவசரத்திற்கு அங்கே இருந்த தீவனப் பெட்டியில் வைக்கோலைப் பரப்பி அதில் குழந்தையை படுக்க வைத்தாள். விலையுயர்ந்த செல்வங்களைப் பாதுகாக்கும் நகைப்பெட்டியாக உருவெடுக்க நினைத்த மரத்திற்கு அதைவிட மதிப்பு வாய்ந்த ஓர் உயிரைப் பாதுகாக்கும் வேலை கிடைத்ததும் தான் கேட்டதைவிட கடவுள் அதிகமாக கொடுத்திருக்கிறார் என்று உச்சிகுளிர்ந்து போனது.

படகாகிப் போன மரம் ஒரு நாள் கடலில் பயணம் செய்யும் போது புயல் உண்டாகியது. சுழன்றடிக்கும் சூறாவளிக்குத் தாக்கு பிடிக்க முடியாமல் அதில் பயணித்து கொண்டிருந்த ஒவ்வொருவரும் பதறிக் கொண்டிருந்தனர். வயதான துறவி ஒருவர் அவர்களை அமைதிப்படுத்தி விட்டு, தன் கையை உயர்த்தி “நிறுத்து” என்று கட்டளையிட்டார். என்ன அதிசயம்! புயல் சட்டென்று நின்றது. பரவசமடைந்த பயணிகள், அந்த துறவியின் காலில் விழுந்து வணங்க மாமன்னனை விட ஒரு பெரிய மகானைச் சுமந்த சந்தோஷத்தில் அந்த மரம் மகிழ்ச்சி அடைந்தது.

இருட்டறையில் முடங்கிக் கிடந்த மூன்றாவது மரம் ஒரு நாள் வெளியே கொண்டு வரப்பட்டது. கண்களில் அருள் பொங்கும் தோற்றமுடைய ஒருவர் அதைத் தூக்கிக் கொண்டு வீதிகளில் தள்ளாடி, தள்ளாடி நடந்து போனார். அவரை சிலர் சவுக்கால் அடித்து அடித்து ஒரு மலையில் உச்சிக்கு நடத்திச் சென்றார்கள். அங்கே அந்த மரத்திலேயே அவரை ஆணி வைத்து அறைந்தார்கள்.

அவன்தான இயேசு கிறிஸ்து என்ற மகான்!. இந்த உண்மை தெரிய வந்ததும், தன் ஆசையை இறைவன் பூர்த்தி செய்து விட்டதை அறிந்து அந்த மரம் மகிழ்ச்சியில் விம்மியது.

ஆக, மூன்று மரங்களும் தாங்கள் என்னவாக வேண்டும் என்று ஆசைப்பட்டனவோ அவ்விதமே ஆயின. ஆனால் அவை விரும்பிய வழியில் அல்ல. கடவுள் தேர்ந்தெடுத்த வழியில் !!!!!!!!

ந.சிந்து
ஐ – டீ.யு. நுபெடiளா – டீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad