மல்லிகைப்பூ
எமது தமிழ்க் கலாச்சாரத்தில் பாண்டியர் காலத்தில் இருந்து இன்றுவரை பெண்கள் தலையில் சூடும் மல்லிகை பற்றி பலவித பாக்களும், பாடல்களும் இயற்றப்பட்டுள்ளன. இலங்கை, இந்திய, மலேசியா மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மல்லிகைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, அவர்கள் தினசரி வாழ்விலும், வழிபாடுகளிலும் மல்லிகைப்பூவை, தொடர்ந்து பாவிப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் தமிழகத்தை எடுத்தோமானால் பல்லாயிரமாண்டு பழமைவாய்ந்த மதுரை மாநகர் தனக்கென உரிய பூவாக ‘மதுரை மல்லியைச்” (Jasmine சமபக்) சூடிக்கொள்ளுகிறது.
மனத்தைச் சாந்திசெய்யும் மல்லிகையின் அற்புதமான மணம்
தமிழர் வாழுமிடங்களில் காணப்படும் வழிபாட்டுத்தலங்கள் எங்கும் பரவிச் சிறப்பிக்கின்றன எனலாம்.
மல்லிகைப்பூத் தைலம் Jasmine Oil
மல்லிகைப்பூத் தைலத்தை பெண்கள் உடலில் பூசியும், வசீகர திரவியமாகவும் பாவிப்பர். மல்லிகையின் நறுமணம் மனதிற்கும் உள்ளுடலுக்கும் பல் வேறு சுகத்தைத் தரும் என்று சித்தர் சுவடிகள் தொட்டு தற்கால நுகர்தல் விஞ்ஞான ஆராய்ச்சிகளும், அதனை மருத்துவமாக பாவிக்கும் நுகர்தல் மருத்துவமும் ( Aroma Therapy ) எடுத்துக் காட்டுகின்றன.
மல்லிகைப்பூத் தைலம், மனநெருக்கடி Stress, மனோத்துவ நோய்களாகிய அதி பயம் Anxiety, மனத்தாழ்வுதன்மை Depression, சோர்வு Fatigue, பெண்களின் இறுதி மாதவிடாய் Menopause சார்ந்த ரோகங்களை இயற்கையாகவே தணிக்க வல்லதாம்.
புள்ளிவிபரம்
பங்குனி தொடங்கி வைகாசி மாதம் வரை ஏறத்தாழ 1000 ஏக்கர்களிலிருந்து 20 மெட்ரிக் டன் மல்லிகைப்பூ சந்தையில் விலைக்கு வருகிறது.
தமிழக நுகர்வோர் மாத்திரம் இதில் 8-10 டன் மல்லிகைப்பூவை தமது அன்றாடத் தேவைகளிற்குப் பாவிப்பர்.
கனடா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா போன்ற வெளிநாடுகளிற்கு ஏறத்தாழ 1 டன் மல்லிகை விமானமூலம் சென்றடையும்.
மிகுதி மல்லிகைப்பூக்கள் உள்ளூர் வாசனை உற்பத்திச்சாலைகளுக்குச் சென்றுவிடும்.
மினசோட்டாவில் மல்லிகைச் செடியைப் பராமரிப்பது எப்படி?
வளரும் காலநிலை குறைவு என்ற படியால் மினசோட்டா மாநிலத்தில் மல்லிகைக் கன்றுகளைப் பூச்சாடிகளில் வைப்பதே நல்லது. பூச்சாடிகள் சிறிய கன்றுகளிற்கு 10 அங்குலம் பெரியவைக்கு 14 அங்குலச் சாடிகளிலும் வைத்துக்கொள்ளலாம்.
மல்லிகைச் செடி மினசோட்டாவில் வெளி நிலத்தில் உள்ள மண் கொண்டு பூச்சாடியை நிரப்புவுது ஒவ்வாத செயல். மல்லிகைச் செடிக்கு ஏற்கனவே கலக்கப்பட்ட potting mix வாங்கிப் பயன்படுத்துவது சிறந்தது.
மேலும் இலை உக்கல், சாண உரம் Hummus and Manure 1 பங்கும், மண் top soil ஒருபங்கும், தேங்காய்த்தும்பு அல்லது உலர்ந்த பாசி Peat Moss ½ பகுதியும், ஆற்று மணல் ½ பகுதியும் கலவை செய்து சாடியில் போட்டு வளர்க்கலாம்.
மல்லிகைச் செடியை எங்கே பெறுவது?
எமது மாநிலத்தில் பூக்கன்று விற்பனையாளர்கள் பிரதானமாக இருவகை மல்லிகை கன்றுகளை விற்பதுண்டு.
ஒன்று பிச்சிப்பூ/யாழ்ப்பாணம் முல்லை Winter ஜாஸ்மினே ;
மற்றயது Jamine Sambac or Arabian Jasmine. இவற்றை விட மஞ்சள் மல்லிகை, மடகஸ்கார் மல்லிகை என்றெல்லாம் பல இனத்தாவரங்கள் விற்கப்படும். ஆயினும் மற்றய இனப் பூக்கள் மேற்கொண்டுள்ளவை போன்ற நறுமணத்தைத் தரமாட்டாது.
மல்லிகைச் செடியை பதியம் propagation செய்து புதிய தாவரங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். இளவேனிற் காலத்தில் முற்றிய செடித்தண்டுகளை சுமார் 3 அங்குலத்தளவில் கூரான கத்தியால் வெட்டி தண்டின் கீழ்ப்பகுதியை வேர் உண்டு பண்ண உதவும் இரசாயனத்தில் Root Hormone தோய்த்து சிறிய பூச்சாடிகளில் வைத்துக்கொள்ளலாம்.
மேலும் பூச்சாடியை ஒளி உள்ளே விடும் அதை சமயம் ஈரப்பதம் humidity காக்கும் ஒரு plastic பையால் மூடி புதுத்துளிர்கள் வரும் வரை வைக்கலாம். ஏறத்தாழ 6-8 கிழமைகளில் புதிய மல்லிகைச் செடி துளிர்க்கும். மினசோட்டாவில் இதை மாசி,பங்குனி மாதம் வீட்டிற்குள்ளே வளர்த்து, பனி அகன்ற பின்னர் வெளியே எடுத்துச் செல்லலாம்.
உசாத்துணை
1. Joint Inspection Team (JIT) Report of National Horticulture Mission for Tamil Nadu State-Report 2013
2. Kuroda K, Inoue N, Ito Y, Kubota K, Sugimoto A, Kakuda T, Fushiki T. “Sedative effects of the jasmine tea odor and (R)-(-)-linalool, one of its major odor components, on autonomic nerve activity and mood states.” Eur J Appl Physiol. 2005 95(2-3):107-14.
3. Indian Jasmine G.N. Gupta and Ganesh Chandra, Economic Botany Vol. 11, No. 2, Apr. – Jun., 1957
Published by: Springer on behalf of New York Botanical Garden Press