முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 3
1944 ஆம் ஆண்டில், ஒரு ஜெர்மன் கர்னல் ஃபிரெஞ்சு கலை
பொக்கிஷங்களை ஒரு புகைரதத்தில் ஏற்றி ஜெர்மனிக்கு அனுப்புகிறார்.
அதையறிந்த ஃபிரெஞ்சு போராட்டக்கார புகைரத கண்காணிப்பாளர் ஒருவர் கலைப் பொருட்கள் சேதமாகாமல் புகைரதத்தை தடுத்து நிறுத்த பாடுபடுகிறார்.
இது 1964 ம் ஆண்டு கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட போர்காலத் திரைப்படமான இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.
நூற்றிமுப்பத்து மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் 5.8 மில்லியன் அமெரிக்க வெள்ளி செலவில் எடுக்கப்பட்டு 6.8 மில்லியன் சம்பாதித்தது
உங்களைப் படம் முழுதும் இருக்கையின் முனையில் உட்கார வைக்கும் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பு கொண்ட இத்திரைப்படத்தை இயக்கியவர் John Frankenheimer.
இதில் வரும் புகைரத நிலையத்தை சுக்குநூறாக ஆக்கும் காட்சியும் , புகைரதம் தண்டவாளத்தை விட்டு இறங்கும் காட்சியும், புகைரதம் ஒன்றோடு ஒன்று மோதும் காட்சியும் மிக அருமையாக எடுக்கப்பட்ட காட்சிகள்
இத்திரைப்படத்தை உங்கள் சின்ன திரையில் கண்டு மகிழ
https://www.imdb.com/video/hulu/vi1203372569?ref_=tt_pv_vi_1
Sallie Gardner at a Gallop
1878ம் ஆண்டு zoopraxiscopeல் காட்டப்பட்ட முதல் நகரும் படம் (motion picture).
இப்படம் 24 புகைப்படங்களை வரிசையாக வேகமாக நகர்த்தி காட்டப்பட்டது. இதை இயக்கியவர் அல்லது இதை உருவாக்கியவர் எட்வர்டு முய்பிரிஜ்(Eadweard Muybridge) என்ற முன்னனி புகைப்படக் கலைஞர். இந்த மிகக் குறும் படத்தைக் காண
https://www.youtube.com/watch?v=o-ZJxDHDK9c
-சத்யா-