உலகச் செம்மொழி – அத்தியாயம் 13
அத்தியாயம் 12 செல்ல இங்கே சொடுக்கவும்
தமிழ் கூறும் நல்லுலகில் தமிழின் பெருமை என்று எதைச் சொல்லுவது? தமிழிலிருந்து கிழைத்து வளர்ந்த மொழிகளைப் பற்றிச் சொல்வதா, அல்லது ஆதி மனிதக் கதை சொல்லுவதா, எம் மதங்களின் மூலமும் தமிழே என்ற பெருமையைச் சொல்லுவதா? .. அனைத்தும் சொல்லுவது என்று முடிவெடுத்து, ஆதி மனிதக் கதையில் ஆரம்பிக்கின்றேன்.
ஆதிமனிதக் கதை என்றால் ஆதாம் ஏவாள் கதையா? அது கிருத்துவக் கதை ஆயிற்றே! கிருத்துவம் யூதமும், அரமாய் மொழியும் பேசிய இடத்தில் அல்லவா தோன்றியது. அங்கே தமிழ் எப்படி வந்தது? கிருத்துவ மறைநூலில் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் அத்துணைக் கதைகளும் தமிழ் மறபுக் கதைகளே என அறுதியிட்டு நிருபித்திருப்பவர் என் போற்றுதலுக்குரிய ஐயா மா.சே விக்டர் என்னும் கிருத்துவர்.
பழைய ஏற்பாட்டின்படி மனிதனைக் கடவுள் மண்ணிலிருந்து உருவாக்கினார்.
மண்ணிலிருந்து உருவாக்கியதால் அவன் தமிழில் மனிதன் ஆனான். அவனே ஆங்கிலத்தில் Man ஆனான். தமிழர்களுக்கு அரவர்கள் என்ற ஒரு பெயர் உண்டு. அரவம் என்றால் பாம்பு அல்லது நாகம். நாகர்கள் வழிவந்ததால் தமிழர்கள் அரவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இந்த அரவர்கள் ஆதாம் ஏவாளுக்கு ஆப்பிள் என்று ஆங்கிலத்திலும் தொப்பையா என்று எபிரேய மொழியிலும் உள்ள அந்தப் பழத்தை அறிமுகப்படுத்துகின்றனர். ஆப்பிளின் குழிந்திருக்கும் அதன் வாய் பகுதியையும் மனிதனின் தொப்புளையும் ஒப்பிட்டீர்களானால் தொப்பை வாய்ப் பழத்தை எப்படி தொப்பையா என்று எபிரேயத்தார் சுத்தத் தமிழில் குறிப்பிடுகின்றனர் என்று அறிவீர்கள். தமிழின் தொன்மைக் கதைகளிலே ஆழிப் பேரலையிலே மூன்றில் இரண்டு பாகம் தமிழர் இறந்ததாகவும் ஏனையோர் தப்பிக் கரை சேர்ந்ததாகவும் சொல்லப்படுகின்றது. அவ்வாறு நாவாய் ஓட்டிப் பிழைத்த ஒரு தமிழன் நோவா. ஆழிப்பேரலையில் அவன் கரையேறிய பகுதி இன்றைய ஈரான் ஈராக் பகுதியாகும்.
அறம் + வாய் எனும் இரு தமிழ்சொற்களில் அறம் இடத்தையும் , வாய் மொழியையும் குறிக்கிறது. அறம் என்னும் பகுதி பாபிலோனுக்கு வடக்கே இருந்தது . அறம் என்பது நோவாவின் பேரனின் பெயர். அப்பகுதியில் பேசப்பட்ட மொழி அறம் வாய் பின்னர் அறமாய்க் எனத்திரிந்தது. ஆபிரகாம் பிறந்த ஊரின் பெயர் ”ஊர்”. ஆபிரகாமை ‘அலைந்து கொண்டிருந்த அறம் வாயன்’ என்று விவிலியம் விளிக்கிறது .
நாம் எல்லாம் பொட்டியக்கட்டிக்கிட்டு ஊரில் இருந்து கிளம்பி இங்க வந்தோம் ஆனா நோவாவே பொட்டி கட்டிகிட்டு கிளம்பிப் போன இடமே ஊருக்குதாங்க..
Reference
பஃறுளி முதல் யூப்ரடீசு வரை
– சத்யா.