உழைப்பின் மகத்துவம்
“அப்பப்பா…. இந்த வேகாத வெயில் இப்படி வாட்டி வதைக்குதே” என்று புலம்பிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தாள் கமலா. அப்போது, எதிரே வந்த தனது இளமைக்காலத் தோழி ராதாவைக் கண்டாள்.
இருவரும் நலம் விசாரித்துக் கொண்டார்கள். ‘உன் மகன் சுரேஷ், மருமகள் சுமதி எல்லாரும் எப்படி இருக்காங்க’ என்று இராதா, கமலாவிடம் கேட்டாள். ‘ம்ம்ம்….’ எல்லாரும் நல்லா இருக்காகங்க’ என்று கமலா கூறினாள்.
‘ஆமா, நீ முதல்ல நல்லா குண்டா இருந்த, ஆனா இப்ப இப்படி இளைச்சு போயிட்டியே’ என்று இராதா கேட்டாள். எம்மருமக எல்லா வேலையும் முதல்ல அவளே செஞ்சா. ஆனா இப்ப எல்லா வேலையும் நானே செய்யறதா இருக்கு ராதா. அவ ஒரு வேலையும் செய்யறதே இல்ல’ என்று புலம்பித் தீர்த்து விட்டார் கமலா. ‘சரி உடம்ப நல்லா பாத்;துக்கோ’ என்று கூறிக்கொண்டு இருவரும் சென்று விட்டனர்.
‘சுமதி……சுமதி;’ என்று அழைத்தவாறே வீட்டிற்குள் நுழைந்தான் சுரேஷ். ‘ஒரே தலைவலியா இருக்கு’, என்று சுமதியிடம் தேநீர் கொண்டு வரச் சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றாhன் சுரேஷ். சுமதியும் கையில் தேநீருடன் அறைக்குச் சென்றாள்.
கையில் டீயை வாங்கிய சுரேஷ், ‘அம்மா எங்க போயிட்டாங்க’ என்று கேட்க, அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த கமலா வீட்டிற்குள் நுழைந்தாள். பேச்சொலி கேட்டதும் நின்று விட்டாள். அத்தைய இப்பதான் மார்க்கெட்டிற்கு அனுப்பி வைச்சென்; என்று சுமதி சொன்னாள்.
இந்த வயசான காலத்துல அம்மாவ எதுக்கு வெளில தனியா அனுப்புன, சொல்லியிருந்தா நானே வாங்கிட்டு வந்துருப்பேன்ல என்று கேட்டான் சுரேஷ்.
‘இல்லைங்க, அன்னைக்கு ஒருநாள் அத்தைக்கு உடம்பு சரியில்லைன்னு நானும் அத்தையும் ஹாஸ்பிட்;டலுக்கு போனோமே, அப்போ டாக்டர் அத்தைய செக் பண்ணிட்டு, அவங்க ஓபேசிட்டிய குறைக்கணும்னு சொன்னாங்க, தினமும் கொஞ்ச தூரம் நடக்கணும், நல்லா வியர்வை வர மாதிரி வேலையெல்லாம் செய்யணும். சாப்பாட்டுல உப்பு, புளிப்பு, காரம் இதையெல்லாம் குறைக்கச் சொன்னாங்க. அதனாலதான் நான் இவ்ளோ நாளா அவங்கள எல்லா வேலையும் செய்ய சொல்லிக் கொஞ்ச தூரம் நடக்கட்டும்னு மார்க்கெட்டிற்கு அனுப்பி வெச்சேன்.
இப்ப அவங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. நல்லா இருக்காங்க. உடம்பும் குறைஞ்சுடுச்சு. இனிமே நானே எல்லாத்தையும் பாத்துக்கறேன்னு சொல்லி முடிக்கும் முன்பே கமலாவின் கண்களில் நீர் ஆறாய் பெருக்கெடுத்தது.
நீதி : 40 வயதை எட்டினால்,
உப்பு, புளிப்பு, காரத்தின் அளவைச் சுருக்கு,
உன் நீண்ட ஆயுளைப் பெருக்கு
– மு.ராகன்யா, I – B.Sc. Maths