மினசோட்டா மாநில எல்லைக்குள் இருக்கும் பெரும் ஏரிகள்
எமது மாநிலமானது 10,000 க்கும் மேற்பட்ட ஏரிகள் கொண்டு செழிப்புற்றுக் காணப்படும் மாநிலம் என்று பெருமைப்படுவோம். உண்மையில் மாநில வனக்காப்புத் திணைக்களம் (Department of Natural Resouces – DNR) 2008ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நமது மாநிலம் 11,842 ஏரிகளை உள்ளடக்கியுள்ளது. எனினும் சில வரலாற்றுப் பத்திரங்கள் ஒரு காலத்தில் 15,291 ஏரிகள் நிலப்பரப்பளவில் 10 ஏக்கர்களிலும் பெரிதாக இருந்துள்ளன என்கின்றன.
மினசோட்டா என்ற சொல்லே பூர்வீக வாசிகளால் சூட்டப்பட்ட சொல்லொன்றாகும். மினி Minni என்பது நீர் சோட்டா Sota சற்று கலங்கியது – கலங்கிய நீர்ப்பிரதேசம் எனப் பொருள்படும்.
இவ்விடம் மாநில எல்லைகளாகவும் உட்புறத்தில் பல்லாயிரம் நந்நீர்த் தேக்கங்களாக ஆறுகளும் காணப்படுகின்றன. இவற்றில் மாநிலத்தின் உள்ளே நிலப்பரப்பின் படிமுதல் பத்துபெரிய ஏரிகளின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன
1. சிவப்பு ஏரி (Red Lake) – பரப்பளவு: 288,98
2. மில் லேக்ஸ் ஏரி (Lake Mille Lacs) – பரப்பளவு: 132,515 ஏக்கர்
3. லீச் ஏரி (Leech Lake) – பரப்பளவு: 132,516 ஏக்கர்.
3. வினிகோபிஷ் ஏரி (Lake Winnibigoshish) – 58,544 ஏக்கர்.
5. வெர்மிலியான் ஏரி (Lake Vermillion) – பரப்பளவு: 40,557 ஏக்கர்.
6. கபேடொகாமா ஏரி (Lake Kabetogama) – பரப்பளவு: 25,760 ஏக்கர்.
7. மட் லேக் (Mud Lake) – பரப்பளவு: 23,700 ஏக்கர்.
8. காஸ் ஏரி (Cass Lake) – பரப்பளவு: 15,596 ஏக்கர்.
9. மினடாங்கா ஏரி (Lake Minnetonka) – பரப்பளவு: 14,004 ஏக்கர்.
10. ஆட்டர் டெய்ல் ஏரி (Otter Tail Lake) – பரப்பளவு: 13,725 ஏக்கர்.
-யோகி அருமைநாயகம்