\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சுமக்கும் நினைவுகள்

Filed in இலக்கியம், கவிதை by on September 10, 2014 0 Comments

sumakkum_ninaivukal_620x443தளிர்க் கரங்கள் பற்றி நின்ற

தண்மை இன்றும் நினைவை வருடுது

சற்றே ஒதுங்கிய வெண்ணிறப் பற்கள்

சடுதியில் வந்து சாகசம் புரியுது….

 

விலாசமாய் விரிந்து பரந்த நெற்றியில்

விடலைப் பருவத்தில் நான்பதித்த முத்தம்

வருடங்கள் உருண்டோடி வாழ்க்கை திசைமாறினும்

வளம்மாறாப் பசுமையாய் வருடியது என்னுள்ளம்

 

கூர்மையாய் நீண்ட குருத்தான மூக்கு

கூட்டிய நினைவுகள் இன்னமும் இருக்கு

குவிந்த அதரங்களில் ரேகைகள் பெருக்கு

குளிர்ந்த என்மனதில் மாறாத கருக்கு !!

 

அலைகளாய்ப் பறந்த அணங்கவள் குழலும்

அன்றைய நினைவினில் இதயத்தில் சுழலும்

ஆடைகள் அணிகலன் அங்கத்தில் புரளும்

ஆழ்ந்து ரசித்த நினைவது திரளும்

 

சாளரம் வழியே பார்த்ததந்தக் காட்சி

சாகும் வரையிலும் மீளாதந்த மாட்சி

உறக்கம் துறந்த உன்னத ஏகாதேசி

உறவினைப் புதுப்பித்த உயர்வான ராசி

 

நளினமாய்ப் படர்ந்த உடலின் வளைவுகள்

நலமாவென வினவும் தினசரி நினைவுகள்

திரண்டு வளர்ந்த பின்புற அழகது

தினம் தவறாமல் கனவினில் உதிக்குது !!

 

கருத்தாய் ரசித்த கருமை நிறமது

கனவில் புகுந்து கலகம் புரியுது

பள்ளி முடிந்ததும் கன்னியவள் உடன்சேர்ந்து

பயணித்த மிதிவண்டி பசுமையாய் மின்னுது

 

காலங்கள் பலவும் உருண்டோடி முடிந்தும்

காட்சியில் நிஜமாய்க் களித்திட்ட உருவம்

கானல்நீராய்க் கரைந்து மறைந்தே போயிடினும்

காதலான மனதில் காவியமாய் நிலைத்ததுவே !!!

 

– வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad