எசப்பாட்டு – வாழ்க்கைச் சக்கரம்
இருவர் புரிந்திட்ட காமத்தின் விளைவோ?
இறைவன் அருளிய இணையிலா விதியோ?
இயற்கை ஊன்றிய இன்பமான விதையோ?
இயல்பாய் உயிரினம் ஆற்றிய வினையோ?
இறப்பு
உலகத் துயரதில் உளமும் கனத்து
உணர்வுப் போரினில் தோற்று முடித்து
உடலின் சக்தியை முழுவதும் இழந்து
உறங்கிக் களித்திடும் உன்னத நிலையது !!!
– வெ. மதுசூதனன்.
கடவுள் அமைத்து வைத்த மேடையில்
காதல் ஈர்ப்புடன் கண்மூடும் வேளையில்
காத்திருந்த ஜீவன் இலக்கைச் சேர்ந்து
கருவில் அமைதியுடன் புகுந்தது பிறப்போ ?
கண்டவை எல்லாம் கானலாய் மாறிவிட
கொண்டவை அனைத்தும் மாயமாய் மறைந்திட
கருமம் மட்டும் பாரமாய்த் தொடர்ந்திட
கருப்பைக்குக் காத்திருக்கச் செல்வது இறப்போ?
– பிரபு
பிறப்பு
பிறப்பெனும் பெருந்துயர் அறுக்க
புறப்பட்ட சாமியர் படையிருக்க
உன் கண நேர மகிழ்ச்சி
மாயப் பிறப்பறுக்கும் மாதவன் பெருந்தோல்வி!!!
இறப்பு
உலக ஞானம் முழுதும் பெற்று
செல்வ மெல்லாம் வென்று முடித்து
சொந்த மெல்லாம் தேடிச் சேர்த்து
நொடிதனில் உதறிடும் என்ன நிலையிது!
– சத்யா