உலகச் செம்மொழி – அத்தியாயம் 14
அத்தியாயம் 13 செல்ல இங்கே சொடுக்கவும்
இப்படி ஆதி மனிதன் ஆதாம் ஏவாள் முதல் நோவா வரை தமிழ் மூலப் பெயர்களையே கொண்டுள்ளனர். தமிழைக் கடவுளாகப் போற்றும் மரபு நம்முடையது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு திரு கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஒரு பட்டிமன்றத்திற்கு வந்திருந்தார். நடுவராகக் கவிப்பேரரசு வைரமுத்து அமர்ந்திருந்தார்.. கனிமொழியைப் பேச அழைக்கும் போது ’தமிழ் அனைவருக்கும் தாய் என்றால் இவருக்கு மட்டும் தந்தை’ என்று
கலைஞர் கருணாநிதியைத் தமிழாக உருவகித்தார்.
தமிழ் பாபிலோனியப் பகுதியில் வேளாண்மைக்கான ஆண் கடவுளாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது. விதைப்புக் காலத்தில் அவரை மகிழ்சியோடு
கொண்டாடியும் அறுவடைக் காலத்தில் அவர் இறந்துவிடுவதாக மாரடித்து அழும் பழக்கம் (தமிழர் போலவே) இருந்திருக்கின்றது.
இது வெள்ள காலத்திற்குப் பிறகு தமிழர் அங்கு குடியேறி விவசாயத்தை அறிமுகப்படுத்தியதன் நன்றிக் கடனாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இன்றைய பாகிஸ்தான் மற்றும் வட மேற்குப் பகுதியில் ஒரு சில கிராமங்களில் மட்டுமே பேசும் சில நூறு மொழிகள் உள்ளன.
அவற்றில் ஒன்றாகத் தமிழை ஒத்த டமிழி என்ற மொழி ஒன்று உள்ளது. இந்தப் பிரதேசத்திலும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் பேசப்படுகின்றன.
டமிழிக்கும் தமிழுக்குமான ஒற்றுமை இன்னும் ஆராயப்படவில்லை.
இதை ஆராய்ந்தால் சில ஆச்சரியங்கள் வெளிவரக்கூடும். இந்தப் பகுதியில் வசிக்கின்ற இஸ்லாமியராக மாறிவிட்ட சில பழங்குடியினரின் குடிப்பெயர்கள்
தமிழக சாதிப்பெயர்களை ஒத்திருக்கின்றன.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி என்று நம்பும் தமிழர்களில் நானும் ஒருவன் ஆதலால் எல்லா மொழிகளுமே
தமிழிலிருந்தே கிளைத்தன என்று சொன்னாலும் நமக்கெல்லாம் தெரிந்த பாடலில் தெரியாத வரிகளில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை சொன்ன செய்தியோடு
இந்த அத்தியாயத்தை முடிக்கலாம் என நினைக்கின்றேன்.
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
இவ்வாறு மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய
தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில், இந்த வரிகள் மற்றும் இன்னும் சில வரிகள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன.
-சத்யா-