\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மாற்றம் தேவை

Filed in கதை by on December 24, 2014 0 Comments

maattam4_620x852“Sorry sir, I will make sure it won’t happen again!” என ப்ரித்வியின் அம்மா பள்ளி முதல்வரிடம் கேட்டுக்கொண்டாள். அவள் கண்களில் கோபம் தெரிந்தது. ப்ரித்வி மெளனமாக பக்கத்தில் அமர்ந்திருந்தான்.

பள்ளி முதல்வர் கடும் குரலில் “He need to learn to share with others. Otherwise he will get into fight again and again. Prithvi, let this be the last time we call on your parents.என்று கூறினார்.

“But..but..Sir..” என ப்ரித்வி இழுத்தான்.

“I don’t want to hear any more excuses, you guys can go. I have a meeting to go to now.” என கூறிக்கொண்டே வெளியேறினார்.

ப்ரித்வியும் அம்மாவும் காரில் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தனர்.

“அம்மா, John மேலதான் தப்பு. Ball விளையாட எனக்குத்தான் நல்லா தெரியும். அவன் ஏன் Ball வேணும்னு கேக்கறான்?”.

அம்மா கோபத்தில் படபடவென பொரிந்தாள்.

“மத்தவங்களோட share பண்ணனும்னு எவ்வளவு தடவை சொல்லிருக்கேன்? இப்படி Schoolக்கு மூணாவது தடவையா வரவெச்சிட்டியே. நீ share பண்ணாம இருந்தா நரகத்துக்குதான் போவே.”

மூணாம் வகுப்பு படிக்கும் ப்ரித்விக்கு நரகம் என்றால் என்ன என்பது தெரியாது. “அப்படினா என்னம்மா?”.

இன்னும் கோபத்தில் இருந்த அம்மா,  “எப்படின்னா என்ன’’?

“You just told that word, நரகம். அப்படினா என்ன’’?

“கேள்வி மட்டும் நல்லா கேளு. நரகம்னா நரகம்தான். உங்க அப்பா என்னடானா அமெரிக்கா வந்தும், கோவில் கோவிலா சுத்தறாரு. உன்ன வச்சி ஒன்டியாளா சமாளிக்க முடியலடா.” என கொட்டித் தீர்த்தாள்.

வீட்டுக்கு  அப்பா வந்ததும் அம்மா அவரிடம் நடந்ததைக் கூறி அவனுக்கு புத்தி கூறும்படி சொன்னாள்.

“சிவா சிவா! ஆண்டவன் தான் அவனுக்கு நல்ல புத்தி குடுக்கணும்.” என சொல்லிக்கொண்டு அவன் அறைக்கு என்றார்.

ப்ரித்வி அவன் அறையில் பந்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்பாவைப் பார்த்ததும் அவன் பக்கம் நியாயம் இருப்பதாகவும், ஜானுக்கு பந்து விளையாடவே தெரியாது ஆனால் சும்மா பந்து கேக்கறான் என தன் பக்க நியாயத்தை கூறினான்.

அப்பா பொறுமையாக அவன் நெற்றியில் வீபூதி இட்டு,

“அது தப்புய்யா, ஜான் பாவம் தானே?” என்று கூறினார்.

“நரகம்னா என்ன அப்பா?” என கேட்டான்.

அப்பாவுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. அவர் நிதானமாக “சொர்க்கத்தில எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க, நரகத்துல எல்லாரும் சோகத்துல அழுதுண்டு இருப்பாங்க. இதுக்குமேல எனக்கு தெரியாதய்யா. அய்யாவுக்கு யாரு நரகத்த பத்தி சொன்னாங்க

“அம்மா சொன்னாங்க, அவங்களுக்கும் பதில் தெரியல்ல”

“அய்யா, இந்த கோவில் பிரசாதம் சாப்பிட்டு தூங்குங்க, காலைல பள்ளிக்கு போகணும்ல?” என சொல்லியபடி அவன் வாயில் வாழைப்பழத் துண்டை ஊட்டினார். அவருக்கு நரகத்தைப் பற்றி மேலும் விளக்கி அவனைப் பயமுறுத்த விரும்பவில்லை.

ப்ரித்வியும் களைப்பாக இருந்ததால், உடனே உறங்கிவிட்டான். சிறிது நேரத்தில் அவனை யாரோ உலுக்கி எழுப்பினார்கள். பாதி தூக்கத்தில் கண் விழித்து பார்த்தான். தன் முன்னே முருகப்பெருமான் உருவத்தில் ஒரு பாலகன். ப்ரித்வி தன் கண்களைக்   கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான். நிதானமாக அருகில் சென்று அவர் கையில் இருந்த வேலை தொட்டுப் பார்த்தான். அதன் நுனி கூர்மையாக இருந்ததால் அவன் கையில் சிறிய காயம் ஏற்பட்டது. “அம்மா..” என கதறினான்.

சிறிது நேரத்தில், கடவுள் தான் நம் முன் இருக்கிறார் என்பதை உணர்ந்தான். கடவுளிடம் தனக்கிருந்த சந்தேகத்தை போக்கிக் கொள்ளலாம் என நினைத்து, நிதானமாக கைகூப்பியபடி  கேட்டான்

“கடவுளே, சொர்க்கம், நரகம்னா என்ன?”. கடவுள் அவனை பின்தொடருமாறு சைகை காட்டினார். கனவா நினைவா என அறியாமல் அவனும் அவரை பின்தொடர்ந்தான். சில நொடிகளில் இருவரும் வானில் பறந்துச் சென்றனர். ஒரு பெரிய மாளிகைக்குள் சென்றனர். ப்ரிதிவிக்கு ஒன்றும் புரியாமல் சுற்றி பார்த்தபடியே கடவுளைப் பின்தொடர்ந்தான்.

சிறிது நேரத்தில், இரு பெரிய கதவுகள் முன் நின்றனர். முதல் கதவு திறந்தது. உள்ளே பளிங்குத் தூண்கள், நீரருவி, பழங்கள், உணவு வகைகள் என அருமையாக காணப்பட்டது. அங்கு பலதரப்பட்ட மக்கள் இருந்தனர்.   ஆனால், அவர்களிடம் ஏதோவொரு வித்தியாசம் இருந்தது. உற்று நோக்குகையில் அவர்கள் கைகளை மடக்க முடியாமல், நீட்டிய படியே இருந்தன. அவர்கள் மிக நலிந்து கண்ணீருடன் காணப்பட்டனர். அவர்கள் கைகளை அவர்களால் மடக்க முடியாததால், அவர்களால் உணவை உண்ண முடியவில்லை. பசியால் சோர்ந்து நலிந்திருந்தனர்  . அவர்களை பார்க்க ப்ரிதவிக்கு பரிதாபமாக இருந்தது.

நரகம் இப்படித்தான் இருக்குமோ என மனதில் எண்ணிக்கொண்டான். நரகத்தில் சோகமாக இருப்பார்கள் என அப்பா கூடச் சொன்னாரே. அது நினைவுக்கு வந்தது. அந்த கதவு மெதுவாக மூடியது. இரண்டாம் கதவு இப்பொழுது திறந்தது. பிரித்வி ஆவலாக உள்ளே பார்த்தான். என்ன அதிசயம், நரகத்தில் பார்த்ததை போன்றே, இதிலும் பளிங்குத் தூண்கள், அருவி, பழங்கள், உணவுகள். இங்கும் உலகத்தில் எல்லா இடத்திலிருந்தும் மக்கள் இருந்தனர். அவர்கள் கைகளும் மடக்க முடியாமல் காணப்பட்டது. ஆனால், அவர்கள் சந்தோஷமாக சிரித்தபடி இருந்தனர்.  நல்ல ஆரோக்கியமாகவும் காணப்பட்டனர்.

அது எப்படி சாத்தியமாகும் என ப்ரித்விக்கு தோன்றியது. சிறிது உற்று நோக்கினான். அங்குள்ளவர்கள், மடக்க முடியாத கையினால்  உணவை எடுத்து   மற்றவர்களுக்கு ஊட்டி விட்டனர். அதப் பார்த்தவுடன் ஒரு பெரிய உண்மை தெரிந்த சந்தோஷம் ஏற்பட்டது. அடுத்த நொடி, அவன் வானத்தில் இருந்து தனது படுக்கையில் விழுந்தான். விழுந்ததில் அப்படியே தூங்கிவிட்டான்.

காலையில் அப்பா அவனை எழுப்பினார். எழுந்தவுடன் அவன் உணர்ந்த உண்மையை எண்ணிப்பார்த்தான். சொர்க்கமும் நரகமும் வேறல்ல. இரு இடத்திலும் உணவு, உடை என எல்லாம் இருந்தது. அது சொர்க்கமா நரகமா என்பது அங்குள்ளோர் நடப்பை பொறுத்தே அமையும். பகிர்ந்து வாழ்ந்தால் எவ்விடத்தையும் சொர்க்கமாக மாற்ற முடியும் என்பதை உணர்ந்தான். அவன் இருக்கும் இடத்தையே சொர்க்கமாக மாற்ற முடிவெடுத்தான்.

அன்று பள்ளியில் ஜானுடன் பந்தைப் பகிர்ந்து விளையாட முடிவு செய்தான். ஆனால், நாம் பார்த்தது கனவா நிஜமா என அவனுக்கு புரியவில்லை. அவன் கையில் வேலால் அறுபட்டது நினைவுக்கு வந்தது.   இன்னும் காயமிருந்தால் இருந்தால் அது கனவில்லை என்று தானே அர்த்தம்? அவசரமாகத் தன் கைவிரலைப் பார்த்தான்.

-பிரபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad