\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஓட்டம்

Filed in கவிதை by on December 24, 2014 0 Comments

ottum_620x437கருவறை முதல் கல்லறை வரை

ஒரு பெரு ஓட்டம்

நடு நடுவே சிற்சில சில்லறை

ஓட்டங்கள்

பத்து மாதத்தில் உலகைத்  தொட்டுவிட

ஒரு ஓட்டம்

பிறந்த எட்டு மாதத்தில்  அடி எடுத்துவைக்க

மறு ஒட்டம்

இரட்டை வயதிற்குள் மழலையைக் கொட்டிவிட

குட்டி ஒட்டம்

பால்குடி மாறா வயதில் பால்வாடிக்கு

ஒரு குறு ஓட்டம்

பள்ளிக்கு சித்தம் கலங்கிட நித்தம்

ஒரு ஓட்டம்

கன்னியரும் காளையரும் கரைகாணா பேரின்ப

பெரு ஓட்டம்

நிலையில்லா மாந்தர்க்கு நிலையான ஆஸ்திக்கு

நிகரில்லா ஒரு ஓட்டம்

சவமான உன்னைச் சீக்கிரமாய் சிவபுரம் சேர்க்கும்

கடைசி ஓட்டம்

-சத்யா-

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad