குறுக்கெழுத்துப் புதிர் – அமெரிக்கப் புதிர்
அமெரிக்கப் புதிர் (Americana) |
இடமிருந்து வலம் |
1. ஒபாமாவுடைய வீட்டின் பெயர் (6 எழுத்துகள்) |
2. அமெரிக்காவுக்கு கிழக்கிலிருக்கும் ஒரு ஐக்கிய ராஜ்ஜிய (UK) நாடு. இந்த நாட்டுடன், ப்ளாரிடா, போர்டோ ரிக்கோ சேர்ந்து ஒரு அமானுஷ்ய முக்கோணமாக கருதப்படுகிறது. (4) |
3. அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இலினாய் நகரம். (3) |
4. இறக்கைகள் கொண்ட பறக்கும் குதிரை. அமெரிக்க விமானப் படை விமானத்துக்கு சமீபத்தில் இந்த பெயர் வைக்கப்பட்டது. (4) |
5. 1950கள் முதல் இன்றும் கூட உலகத்தினரை கட்டிப் போட்ட அமெரிக்க கவர்ச்சி நடிகை. இவரது இயற்பெயர் நார்மா (7) |
6. சூரியவெளிச்சம்/சூரிய பிரகாசம் எனும் செல்லப் பெயர் கொண்ட அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலம். (4) |
7. அமெரிக்கா உருவாக காரணமாயிருந்த 13 காலனிகளில் ஒன்று. ‘சாக்லேட் மாநிலம்’, ‘உருக்காலை மாநிலம்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. (7) |
மேலிருந்து கீழ் |
1. பச்சை மலைகள் மாநிலம் எனும் செல்லப் பெயர் கொண்ட வடகிழக்கு மாநிலம். (5) |
2. சமீபத்தில் மிகவும் பரபரப்பாக ஊடகங்களில் பேசப்பட்ட, மிசௌரி மாநில ஊர். (5) |
7. ஒற்றை பைசாவின் அமெரிக்க வடிவம்.(3) |
8. மினசோட்டா மாநிலத்தில் ஐடாஸ்காவில் தோன்றி பத்து மாநிலங்கள் வழி ஓடும் ஆறு. (5) |
9. கத்தியால் குத்தப்பட்ட டென்னிஸ் வீராங்கனையின் முதற் பெயர். இதே பெயருடைய அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஒருவர் அரசியலில் சிறு சலசலப்பை ஏற்படுத்தினார். (3) |
10. கிராபோர்டு எனும் குடும்பப் பெயர் கொண்ட அமெரிக்க நடிகை. ஒரு காலத்தில் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் மாடல் அழகியாகக் கருதப் பட்டவர். (3) |
11. மார்ட்டின் லூதர் கிங் சமஉரிமை கேட்டு போராடத் துவங்கிய அலபாமாவின் தலைநகரம். (6) |
12. கனேடிய மாகாணம் ஒன்று. இதே பெயரில் 103 பேர் மட்டுமேயுள்ள மினசோட்டா நகரம் ஒன்றும் உள்ளது. (5) |
13. அமெரிக்காவின் தங்க மாநிலம். (6) |
14. எம்பயர் மாநிலம் – இதே பெயரில் நகரமும் உள்ளது. (5) |
15. காஷியஸ் கிளே எனும் இயற்பெயர் கொண்ட குத்துச்சண்டை வீரரின் முதல் பெயர் (4) |
கீழிருந்து மேல் |
7. துப்பாக்கி குண்டுகளை இப்படிச் சொல்கிறார்கள் அமெரிக்காவில் (4) |
16. இஸ்லாமியர்களை அமெரிக்கர்கள் இப்படி அழைக்கிறார்கள் (4) |
17. MGM சினிமா கம்பெனியின் G எழுத்தைக் குறிப்பது (5) |
18. அமெரிக்காவின் தலைநகரம். (5) |
19. அமெரிக்காவின் மிகச் சிறிய மாநிலம். (4) |
20. ஹூஸ்டன் ராக்கெட்ஸ் அணிக்கு விளையாடிய சீன கூடைப்பந்து வீரர். (4) |
வலமிருந்து இடம் |
21. மிக்கி மவுஸ் போன்ற கதாபாத்திரங்களை உருவாக்கியவர். (6) |
பதில்களி்ற்கு இவ்விடம் சொடுக்கவும் |