குறுக்கெழுத்துப் புதிர் – உழவுத் தொழில்
22 பயிர்களுக்கு இடையே விளையும் தேவையில்லாத செடிகள் (2)
உழவுத் தொழில் புதிர் (Americana) |
இடமிருந்து வலம் |
1. நெற்பயிர் வளர விதைக்கப்படுவது (4) |
2. சக்கரை தரும் பொங்கல் பண்டிகையின் அடையாளம் (4) |
3. விளை நிலங்களுக்கு இடையேயுள்ள, நடந்து செல்லக்கூடிய மண் தடுப்புகள் (4) |
4. விதைத்து, வளர்த்து, அறுப்பதைக் குறிக்கும் சொல் ; மொத்த உழவுத்தொழிலின் குறிக்கோள் (4) |
5. மங்கலகரமான நிகழ்ச்சிகளுக்கு முன் நிற்கும் கிழங்கு (4) |
7. காளை மாடுகளுக்கு பெயர் பெற்ற ஒரு ஊர். (5) |
9. விதை துளிர்ப்பதை ________ விடுகிறது என்பார்கள். (2) |
11. விதைகள் நீரில் அடித்துச் செல்லாமல் இருக்க அதைச் சுற்றி அமைப்பது; சிலர் சாப்பிடுவதை இதை கட்டி சாப்பிடுவதாக கிண்டல் செய்வதுண்டு. (3) |
12. விதை நடும் செயலை இப்படிச் சொல்வார்கள். (3) |
மேலிருந்து கீழ் |
1 பயிர் உற்பத்தியையும், கால்நடை வளர்ப்பையும் சேர்த்து வழங்கப்படும் சொல். (5) |
2 தானியங்களைச் சேமித்து வைக்கும் இடம் (6) |
20 விளைநிலங்களை வாடகை முறையில் வேறொருவருக்கு தருவதைக் குறிக்கும் சொல் (4) |
21 பயிர் வளர்ந்து காய்ந்த பின் தேவைப்படாத கூளம்; பயனற்ற மனிதரை குறிக்கவும் இச்சொல்லை சொல்வதுண்டு. (3) |
6 வயல்களில் நீர் பாய்ச்ச ஏற்படுத்தப்படும் நீரோடை (5) |
7 ஆடு, மாடு போன்ற வீட்டுவிலங்குகளை குறிக்கும் சொல்; மனிதர்கள் நடந்து செல்வதைக் குறிக்கவும் இச்சொல் உதவும். (4) |
8 நெல்/ தானிய மணிகள் விளைந்திருப்பதைக் குறிக்கும் (3) |
11 நீர் பாய்ச்சும் வசதியைக் குறிக்கும் சொல். (4) |
14 நிலத்தை உழும் ஏரை குறிக்கும் மற்றொரு சொல் (4) |
15 உழவுத் தொழிலுக்கு மிகவும் அவசியமான வெளிச்சம் தரும் இயற்கை பொருள். தை மாத விழாவில் இதற்கும் நன்றி சொல்லப்படுகிறது.(4) |
வலமிருந்து இடம் |
2. விளைநிலங்களை குறிக்க உதவும் வழக்குச் சொல். பெரும்பாலும் காடு எனும் சொல்லுடன் சேர்த்து சொல்வதுண்டு.(3) |
5. நீரை தரும் இயற்கைச் செயல். (2) |
9. மூன்று முறை மழை பெய்வதைக் குறிக்கும் சொல். (4) |
10. ஆண்பால் மாட்டினைக் குறிப்பது. எருது எனும் சொல்லுக்கு மாற்றுப் பெயர். (2) |
16. பயிர் வளர்ந்த பின் தானியங்கள் வெட்டுவதை / பறிப்பதைக் குறிப்பது. (4) |
18 நீர் வீணாவதை இதற்கு இறைப்பது என்று சொல்வார்கள். (3) |
கீழிருந்து மேல் |
19 போரடித்த பின் தங்கும் காய்ந்த புல் ; மாடுகளுக்கு தீவனம் (4) |
15 பச்சை மண் கட்டிகளை அடுக்கி செங்கல் செய்யும் இடம் (2) |
பதில்களி்ற்கு இவ்விடம் சொடுக்கவும் |