\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பண்டானா சதுக்கப் புகையிரத நூதனசாலை

tcmr_3_620x349மினசோட்டா மாநிலத்தில் பிள்ளைகளும், ஆர்வமிக்க பெற்றோரும் சேர்ந்து மகிழ இயங்கும் மாதிரி உருவகப் புகையிரத நுதனசாலை ஒன்று உண்டு. இவ்விடத்தில் மூன்று தலைமுறைகள் வந்து போவது சகசமான விடயம். பாட்டன், பாட்டி தொட்டு, அப்பா, அம்மா குழந்தைகள் குழுவினர் பலரை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

இது செயின்பால் (St Paul) நகரில் உள்ள 1880களில் கட்டப் பட்டு மீண்டும் பழமை பேணி மீள் சீரமைக்கப்பட்ட பண்டானா சதுக்கத்தில் (Bandana Square) இரண்டாம் மாடியில் அமைந்துள்ளது. இந்த நூதனச் சாலை சுமார் 450 சதுர அடிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

tcmr_10_620x349 tcmr_9_620x349

இங்கு அமெரிக்காவின் புகையிரதப் பொற்காலம் எனப்படும் 1930,40 மற்றும் 50 களில் ஓடிய புகையிரதங்கள், டீசல் வண்டிகளை அமைத்து இயங்க வைத்துள்ளார்கள். இவ்விடம் 1936இல் இருந்து 1972 வரை உலகில் அதிவேகமான புகையிரதங்கள் செயின்பால் நகருக்கும் சிக்காக்கோ நகருக்கும் இடையே ஓடின என்ற துணுக்கையும் நூதனச் சாலை தொண்டர் ஒருவர் தெரிவித்தார். இந்த நூதனச் சாலையில். உருவகங்கள் யாவும் அவற்றின் உண்மைப் புகையிரதங்களைப் பரிமாண ரீதியில் ¼ அங்குல அளவில் எதுவித விவரங்களும் மறைக்காது ஆக்கப்பட்டுள்ளது.

tcmr_4_620x349 tcmr_5_620x349

நூதனச் சாலை 1934இல் செயின்பால் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விடம் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கந்தவர்கள் தொண்டு உதவியுடன் தொடர்ந்து நடத்தப் பட்டு வருகின்றது.

குழந்தைகள் ஏறி நின்று பார்க்க, உட்கார வாங்குகள் புகையிரதப் பாதையெங்கும் போடப்பட்டுள்ளது. பிரதானமாக புகையிரகப் பாதைகள் மினசோட்டா மாநிலத்தின் வெவ்வேறு பாகங்களையும் மாதிரி உருவகங்களாகப் பிரதிபலிக்கின்றன.

tcmr_1_620x349 tcmr_6_620x349

மேலும் புகையிரதப் பயணங்களில் அனுபவசாலிகள் இரவுப் பயணத்தைப் பற்றிப் பல இன்ப ஞாபகங்களை வைத்திருப்பர். இதையும் பூர்த்தி செய்யும் வகையில் நூதன சாலை ஆக்டோபர் மாதத்தில் இருந்து ஃபிப்ரவரி மாதம் கடைசிச் சனிக்கிழமை வரை மாலை 6 இல் இருந்து 9 வரை இரவு ரயில் சேவை என்றொரு நிகழ்ச்சியையும் வைத்துக்கொள்வர். இதன் பொழுது பாரிய ஒளி வெளிச்சங்கள் தவிர்த்து நீல இரவு ஒளியில் மாதிரிப் புதையிரதங்கள் உள்ளே வெளிச்சவீடுகளுடன் நகரும். இந்த மாதிரி புகையிரத வண்டிகள் உருவகங்களில் சில ஏறத்தாழ 700 தனித்தனி ஒளி விளக்குகளைக் கொண்டனவாம்.

புகையிருத நூதன சாலையானது பகல் இரவு என்றில்லாமல் பனிக் காலம் மற்றும் கோடைக் காலம் என்றில்லாமல் எல்லாக் காலங்களிலும், விரைவாக, ஏறத்தாழ 30-45 நிமிடங்களுக்குள் சுற்றிப் பார்த்து வியந்து மகிழக்கூடிய இடமிது.

tcmr_7_620x620 tcmr_2_620x620

முகவரி

1021 Bandana Boulevard East

Suite 222

Saint Paul, Minnesota 55108

திறந்திருக்கும் நேரங்கள்

செவ்வாய்  முதல் வெள்ளி வரை 10am – 3pm

சனி 10am – 5pm

ஞாயிறு Noon – 5pm

யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad