\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நீ இங்கு நிஜமானால்…

Filed in கவிதை by on January 21, 2015 0 Comments

paarvai_920x1360ஒத்தயில நிக்கும் புள்ள

ஒளிவிளக்கில் ஒளிரும் முல்ல

சித்தமெல்லாம் கலங்கிப் போக – என்

சிந்தையிலே வந்தாய் பெண்ணே

 

முத்தமொன்று தந்திடவே  – என்

முன்னெதிரே வந்தவளே

கைப்புடிச்சு நடந்திட வா

கல்யாணம் பண்ணிட வா

 

காசு பணம் கேட்டு நானும்

கைப்பிடிக்க வரவில்லை – உன்

கட்டழகு மேனி கண்டு

காதல் நானும் கொண்டேன் புள்ள

 

முன்னழகில் கிறங்கவைத்தாய்

முடியழகில் கொன்று தின்றாய் – உன்

கண்ணழகில் காதல் கொண்டேன்

கட்டழகே வாடி பெண்ணே

 

வெட்டரிவா கண் கொண்டு

என் நெஞ்சை அரிஞ்சவளே – நாம்

கைப் புடிச்சு நடந்திடலாம்

காதல் கொள்வோம் வாடி புள்ள

 

ஒட்டுமொத்த அழகுடனே

ஒளி விளக்கில் ஒளிரும் கண்ணே

ஆடிப் போய் நிக்கிறேன் நான்

யார்தான் படைத்தான் உன்னை

 

இத்தனை அழகுடன் உன்னை

பிரமன் தான் படைத்தானோ – அன்றி

வேறொருவன் வடித்தானோ

செதுக்கியவன் தாள் பணிவேன்

 

நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே

உன்னைப் படைத்தவன் யோகி

கொஞ்சும் அழகே உன்னைக் கூடி

வாழ்பவன் அதியோகி.

 

– தியா –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad