\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-10

Filed in கட்டுரை by on January 21, 2015 0 Comments

விசாச் சிக்கல்

pulam-peyanthor_620x765புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்களில் பலர் தாம் சென்று குடியேறிய நாடுகளில் தங்குவதற்கான சட்டரீதியிலான அனுமதிப் பத்திரம் (எளைய) இன்றியே பயணங்களை மேற்கொண்டிருந்தனர். இதனால் அந்தந்த நாட்டிற்குரிய சட்டங்களின்படி புலம்பெயர்ந்து சென்ற பலர் நாடு கடத்தப்பட்டனர். வேறு சிலர் சிறை வைக்கப்பட்டனர். பலர் அபராதத் தொகையுடன் அனுமதிக்கப் பட்டனர். இன்னும் பலர் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டனர். தாம் எண்ணி வந்த எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாகிப் போக, புலம்பெயர்ந்த நாடுகளிலும் இவர்களுக்கான சுதந்திரம் மறுக்கப்பட தமது எதிர்காலக் கனவுகள் கானல் நீரான கையறு நிலையில் தமது வாழ்வை எண்ணிக் கலக்கம் கொண்டனர்.

“உருகிய தார் வீதியில்

கால்கள் கொப்பளிக்க

நடந்தபோதும்

நாம் பெற்ற

உண்மையான காற்பங்கள்

அழையா விருந்தாளிகளான

எமக்கு

பாராமுக விருந்தோம்பல்

நினைவுகள் மட்டும் பசுமையாகி

கனவுகளைத் தொலைத்த

எமக்கு

நடப்புக்கள் எல்லாமே

வெம்மை.”1

அடைக்கலம் புகுந்துள்ள நாட்டின் சூழலும் காலநிலையின் ஒவ்வாமையும் வேறு வழியின்றித் தங்கவேண்டிய நிர்ப்பந்தமும் கூறி, ‘ஆயுட்கைதிபோல’ சுதந்திரம் பறிபோன நிலையில் வெளியில் சென்று வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டவர்களாக வாழும் அகதிக் குடியானவனின் தவிப்புநிலை கூறப்பட்டது.

 

இளவாலை விஜயேந்திரன் எழுதிய ‘புதிய அர்த்தங்கள்’ என்ற கவிதையில் புலம்பெயர்ந்து வாழும் பல இலட்சக்கணக்கானவர்களின் இயலாமை கூறப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ‘வீசா’ வழங்க மறுக்கும் தூதரக அதிகாரியின் செயற்பாடு காரணமாக நெருங்கிய உறவுகளின் நல்லது கெட்டதுகளில் கூடப் பங்கெடுக்க முடியாத அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பலரின் நிலை உணரப்பட்டது. இந்த அவலம் புலம்பெயர்ந்துள்ளவர்களில் பெரும்பான்மையானோரின் அனுபவப் பகிர்வுபோல் உள்ளமை விசேடமானது.

 

“எனக்கு விசா தந்த அதிகாரி

மனைவிக்கு

விசா மறுக்கிறான்

யாழ்ப்பாண வடலிகளின் நிழலில்

அம்மம்மா

‘போய்ச் சேர்ந்து’விட்டாலும்

சென்று திரும்பல்

இயலுமோ சொல்”2

 

இன்றைய சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின்பெரும் பிரச்சினையே இதுதான். சொந்த மண்ணையும் உறவுகளையும் பிரிந்து பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் வசிக்கும் இவர்களால் என்னதான் செய்ய முடியும்? எதுவுமே செய்ய முடியாது என்ற கையறு நிலையில், தமது வலிகளைத் தாமே பொறுத்துக் கொண்டு அவலங்களுக்கு மத்தியில் வாழப்பழகிவிட்டனர் என்பதைக் கவிதை வரிகள் உணர்த்துகின்றன.

 

அடிக்குறிப்புகள்

  1.  திருநாவுக்கரசு.ப, (தொ.ஆ), புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.90
  2.  மேலது, பக்.45

 

-தியா-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad