போண்டா தயாரிக்கும் முறை
1 lb உருளைக்கிழங்கு
1 இருவிரல் பிடியளவு மஞ்சள்தூள் (pinch)
½ தேக்கரண்டி மிளகாய்த்தூள்
½ தேக்கரண்டி உப்பு
½ தேக்கரண்டி சீரகத்தூள் (fennel)
1 தேக்கரண்டி கடுகு
போண்டாவின் உள்ளிருக்கும் கலவைக்கு
1 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
10 நறுக்கிய பச்சை மிளகாய்
1/4 கோப்பையளவு சிறிதாக வெட்டிய சின்ன வெங்காயம்
1 சின்னவிரல் அளவு நறுக்கிய இஞ்சி
1 சிறு கறிவேப்பிலைக் கொத்து
போண்டா பொரிக்கத் தோய்த்து எடுக்கும் போண்டா களிமாக் குழம்பு
1/4 கோப்பை வெள்ளையரிசி மாவு
¾ கோப்பை கடலை மாவு
½ தேக்கரண்டி சமையல் சோடா (baking powder) – இது பனிக் காலத்தில் பூரித்து வர உதவும்
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை அவித்துத் தோலுரித்துப் பின் மசித்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து சிறிய வாணலி அல்லது அகன்ற சமையல் பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி உடன் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி போன்றவற்றைச் சிறிது தாளித்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் இருந்து அகற்றி அதனுள் அவித்து மசித்தெடுத்த உருளைக் கிழங்கையும் மஞ்சள், மிளகாய்த் தூள், சிறிது உப்பு, எண்ணெய் போன்றவற்றையும் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். தென்னிந்தியத் தயாரிப்பில் பெருங்காயத்தூள் சிறிதையும் தூவுவர்.
குழையலை உள்ளங்கையால் குவழைகளாக உருட்டி எலுமிச்சங்காயளவில் செய்து கொள்ளவும்
அடுத்து போண்டா குழையலைத் தோய்க்க மேலே குறிப்பிடப்பட்ட களிமாக் குழம்பைத் தேவையான அளவு நீர் சேர்த்து மிருதுவான கலவையாக்கவும்.
பொரிக்கும் வாணலியை எண்ணெய் வார்த்துச் சூடாக்கி, போண்டா உருளைகளை களிமாக் குழம்பில் தோய்த்து எடுத்து பொரித்துக்கொள்ளவும்.
போண்டா பொன் மஞ்சள் நிறம் அடைந்ததும் வடித்தெடுத்து எண்ணெய் வடித்தெடுக்கக் கூடிய காகிதத்தாளில் வைத்துக்கொள்ளவும். போண்டா சூடாகப் பரிமாறவும்.
- யோகி