\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மழலைதரும் மதுபோதை

Filed in இலக்கியம், கவிதை by on March 30, 2015 0 Comments

mazhalai_mathu_620x509உம்மாவில் ம்மழுந்தயென் கன்னத்தில் முத்தமிட்டாள்

உள்ளங்கால் உச்சிமட்டும் கணமதிலே மாய்த்திட்டாள்

 

முட்டியிலே கைவைத்து முழுகாலை நான்பிசைந்தால்

முனகியவள் மெய்மறந்து கிறங்கியே கிடந்திருந்தாள்

 

பார்த்திருந்த பொழுதினிலே உமிழதனை இதழுகுத்தாள்

பாலதனில் தேன்குழைத்து அமுதன்றோ ஊட்டிவிட்டாள்

 

மயில்தோகை அசைவதுபோல் அழகோடவள் நடந்தால்

மதுபோதை தலைக்கேற்றி எனைச்சுண்டி இழுக்கின்றாள்

 

எச்சில்கடி தான்கடித்து மிச்சபண்டம் எனக்களித்தாள்

எந்தன்நிலை நான்மறந்து காத்திருந்தேன் மயக்கத்தால்

 

அவள்தூங்கும் விதம்காண்க நான்பாடும் தாலாட்டில்

அவள்தானே என்னிசைக்கு முதல்ரசிகை  இந்நாட்டில்

 

மார்மீது தலைசாய்த்துப் பிஞ்சுவிரல் மயிர்கோத

மாதவம்தான் செய்தேனோ மழலையவள் மகளாக

 

– சச்சிதானந்தன் வெ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad