\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காணாமல் போன வாழ்வு

Filed in இலக்கியம், கவிதை by on March 30, 2015 0 Comments

kaanaamal-pona-vazhvu_620x880இன்றைய  மாலைப் பொழுதில்

விசாரணைக்கென வந்திருந்த

இராணுவ அதிகாரியின்

அதட்டல் நிறைந்த விசாரணையில்

நான் ஆடிப்போய் விட்டேன்

வழமை போலன்றி

ஒரு சிறிய மாற்றம் தெரிந்தது அவனிடம்

அப்பா பற்றியும் அம்மா பற்றியுமான

அதிக விசாரிப்புக்களிடையே

என்னைப் பற்றிய கேள்விகளிலேயே

குறியாக இருந்தான்.

விவிலியத்தில் வருவது போல

ஆடு தொலைத்த இடையனின் ஏக்கமோ

காசு தொலைத்த பெண்ணின்

வருத்தமோ என்னிடம் இல்லை

ஏனெனில் நான் என்னையே தொலைத்திருந்தேன்

காணமல் போனது ஆடோ

அன்றிக் காசோ அல்ல

என் வாழ்க்கை… என் உயிர்..

காணாமல் போன என் அப்பாவின் படத்துடன்

அம்மா எதற்காக ஊர்வலத்தில் கலந்து கொண்டாளோ

அந்த ஒரு காரணத்துக்காகவே – இன்று

அவளும் காணாமல் போயிருந்தாள்

இந்த இரவு விடிவதற்குள் எதுவும் நிகழாது விடில்

நாளைய தினம் அம்மாவின் படத்துடன்

நானும் காணமல் போவேன்.

அதன் பின் ஐ.நா வரும்

அயல் நாடுகளின் அதிபர்கள் வருவார்கள்

அமெரிக்கா வரும் ஐரோப்பா வரும்

கூடி இருந்து விருந்துண்பர்

விடைபெறும் முன்னே

அவர்களையே விசாரித்தறியும்படி

அறிக்கைவிட்டுச் செல்வர்.

 

– ஊரவன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad