உலகச் செம்மொழி – அத்தியாயம் 1
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி என்று என் தமிழனிடம் சொன்னால், வாலறுந்த முதல் குரங்கு தமிழ் குரங்கென நீ சொல்வாயோ என எதிர்பாட்டு பாடுகின்றான். நம் மொழியின் அருமை பெருமைகளை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. நம் மக்களுக்கு புரிய வைத்தாலே போதும்.
இன்று நம் மக்களுக்கு ஆங்கில மொழி மோகம் அதிகமாக இருக்கின்றது. அதை தவறென்று சொல்லவில்லை. ஆனால் தமிழ் பேசும் போது ஆங்கிலச் சொற்களை இடையிடையே சேர்த்து பேசுவதால் பல தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போகின்றன.
தமிழ் மொழியின்றி எம் மொழியும் இயங்கா என்று நம்பும் தேவனேயப் பாவாணரையும் மா செ விக்டரையும் கொஞ்சம் கொஞ்சம் படித்த, என்னைப் போன்ற மக்கள் பலர் இருக்கிறார்கள். இந்த கட்டுரைத் தொடரில் மற்றைய மொழிகளில் தமிழின் தாக்கம் என்பதை பற்றி நான் படித்ததை, உணர்ந்ததை, கண்டதை, கேட்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகின்றேன்.
எந்த ஒரு படைப்பும் ஆரம்பிக்கும் முன் ”காப்பு” என்று ஒரு பாட்டு இருக்கும். இந்த காப்பு என்பது காத்தல் என்ற பொருளில் தான் உபயோகப்படுத்தப்படுகின்றது. ஊர்க் காவலுக்கு இல்லையென்றால் வயல் காவலுக்கு முறை வைத்துச் செல்வார்கள். பேச்சு வழக்கில் அதை ”இன்றைக்கு யாரு காப்பு?” , ”இன்றைக்கு யாரு காப்புக்கு போறது?”என்று கேட்பார்கள். இதற்கு பதிலாக ”இன்றைக்கு நான் தான் காப்பு”, ”இன்றைக்கு கருப்பன் தான் காப்பு” என்று பதில் வரும்.
இன்று மேலை நாடுகளில் ஆங்கிலத்தில் காவலர்களை காப்ஸ் (காப் + ஸ்) என்று தான் அழைக்கின்றனர். இது தமிழ் ‘காப்’பிலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது.
இது போன்று ”ஸ்” என்ற எழுத்தை தமிழ் வார்த்தையின் முன்னாலோ அல்லது பின்னாலோ சேர்த்தால் பல ஆங்கில வார்த்தைகள் உருவாகுவதை காண இயலும். இந்த ஒலி சேர்வதற்கு மேலை நாடுகளில் இருக்கும் குளிர்ந்த தட்பவெப்ப நிலையே காரணம்.
பின்னு – (ஸ்) + பின்னு –> ஸ்பின்னு என்று ஆகி Spin ஆனது. தமிழும் ஆங்கிலமும் ஒரே பொருளை உணர்த்துகின்றன.
பஞ்சு –> (ஸ்) + பஞ்சு – > ஸ்பஞ்சு என்று ஆகி Sponge ஆனது.
பேச்சு — > (ஸ்) + பேச்சு –> ஸ்பேச்சு -> Speech ஆனது.
பொட்டு -> (ஸ்) + பொட்டு –> ஸ்பொட்டு -> spot ஆனது.
பறத்து -> (ஸ்) + பறத்து –> ஸ்பறத்து -> spread ஆனது.
துடி –> (ஸ்) + துடி–> ஸ்துடி –> study ஆனது.
இந்த ‘துடி’ எப்படி ‘படி’ என்றாகியது என்பதை பின்னர் பார்ப்போம்.
– சத்யா (தொடரும்..)
”இன்றைக்கு யாரு காப்புக்கு போறது?”என்று கேட்பார்கள்.
இதற்கு பதிலாக
”இன்றைக்கு நான் தான் காப்பு”,
தமிழ் மொழி காக்க அடி எடுத்து வைத்த தலைமகனே வாழ்க வளமுடன்
மற்றைய மொழிகளில் தமிழின் தாக்கம் – சிறந்த முயற்சி. கட்டுமரம் போன்ற சிரப்பு பெயர்சொற்க்கள் ஆங்கிலத்துக்கு தாவியது பலரும் அரிந்ததே. ஆனால் (ஸ்) எழுத்தை கொண்டு உருவான பல ஆங்கில சொற்க்கள் – என்ற நிலை புதுமையான விடயம். மொழியியல் ஆய்வு தொடரட்டும்.