உலகச் செம்மொழி – அத்தியாயம் 16
(அத்தியாயம் 15 செல்ல இங்கே சொடுக்கவும்)
கொடுந்தமிழாயிருந்த மூலமொழி பின் திராவிடமொழிகளாய்த் திரிந்துவிட்டது. மூலத்தமிழிலிருந்து முதலில் பிறிந்த முதல் மொழியாக பாவாணரால் கருதப்படுவது தெலுங்கேயாகும்.அது திரிந்த காலம் ஏறத்தாழ கிமு 1500ம் ஆண்டாகும். தெலுங்கு நாட்டிற்கு கீழ் தென்பகுதி முழுவதும் தமிழ் என்னும் ஒற்றை மொழியே வழங்கி வந்துள்ளது. தமிழிலிருந்து திரிந்த திராவிட மொழிகளை வடதிராவிடம், நடு திராவிடம் , தென் திராவிடம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
பனம்பாரனாரும் தொல்காப்பியரும் ஒரே கல்விச்சாலை மாணாக்கர்கள் என்று கூறப்படுகிறது. அப் பனம்பாரனார் கூற்றுப்படி
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து ” (தொல்காப்பியம் சிறப்புப்பாயிரம்)
சேரன் இளவல் இளங்கோ கூற்றுப்படியும்
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு (சிலப்பதிகாரம்)
கிமு 1500க்கு முற்பட்டு வடவேங்கடம் முதற்கொண்டு தென்குமரி வரை தமிழே பேசப்பட்டு வத்துள்ளது.
தமிழில் முதலில் நெடில்களே தோன்றின, அதன் பின்பே குறில்கள் தோன்றின. எகாரம் ஒகார குறில்கள் மிகப்பிந்தியே தோன்றின. இவ்விரு குறில்களும் தோன்றுவதற்கு முன்னரே தமிழர்கள் விந்திய மலைகளுக்கு அப்பால் சென்று குடியேறினர்.
அப்போது பிரிந்த மொழிகள் சூரசோனி,மாகதி, மகாராட்டிரம் ஆகிய பிராகிரத மொழிகளாகும். இவற்றில் எகாரம் ஒகார ஒலிகள் இல்லை. பின்பு இம்மொழிகளிலிருந்து இந்தி, வங்கம்,மராத்தி, குசராத்தி ஆகிய இன்றைய மொழிகள் தொன்றின.
மேற்கூறிய மொழிகளின் சொற்கள் தமிழாயிருப்பதுடன் அதன் தொடர்களும் தமிழையே ஒத்திருக்கின்றன.
இம்மொழி பேசும் மக்கள் வழங்கிய மரபுத் தொடர்களையும் பழமொழிகளையும் கருதி, இம்மொழிகள் முன்னர் திராவிடமாய் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவையே பாவானர் கொண்டுள்ளார்.
இதன் அடிப்படையில் விந்திய மலைகளுக்கு அப்பால் வழங்கப்படும் இந்தி , வங்கம் ஆகியன வட திராவிடம் என்றும்
மராத்தி மற்றும் குசராத்தி மொழிகள் இடைதிராவிடம் அல்லது நடுதிராவிடம் என்றும் அவற்றின் தெற்கே உள்ள தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகியன தென்திராவிடம் அல்லது பின் திராவிடம் என்றும் கொள்ளுவது பொருத்தம் என்று பாவானர் கூறுகின்றார்.
தமிழே வடக்கே சென்று திராவிடமாக திரிந்தது என்பதற்கு உதாரணமாக தென்கோடி திராவிடமான தெலுங்கிலிருந்தும் வடகோடி திராவிடமான இன்றைய பாகிஸ்தான் பகுதியில் வழங்கும் மொழியான பிராகுவிலிருந்தும் சில சொற்களைப் பார்க்கலாம்.
தமிழ் – தெலுங்கு
நான் – நேனு
நீ – நீவு
அவர் -வாரு
அது – அதி
அவை- அவி
ஆம்- அவுனு
ஆகாது- காது
தமிழ் – பிராகுவி
அப்பா – பாவா
அம்மா – அம்மா,லும்மா
உறை- உரா
நீர் -தீர்
அரம்- அர
முன்னே-மோனீ
யார் -தேர்
தொடரும்
-சத்யா-
நன்றி : பாவாணர் தமிழ் வரலாறு