குறுக்கெழுத்து – பழமொழி
குறுக்கெழுத்துப் புதிரில் ஒளிந்திருக்கும் பழமொழிச் சொற்களைக் கண்டுபிடியுங்கள்:
இடமிருந்து வலம்
1 அளவுக்கு மிஞ்சினால் இது நஞ்சாகும். (5)
2 அடி உதவுகிற மாதிரி அண்ணனும் இவனும் உதவ மாட்டார்கள். (3)
3 உறவில் கணக்குப் பார்த்தால் _______________ தான் மிஞ்சும் (4)
6 சும்மா இருந்ததை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. அது என்ன? (3)
7 இப்படி உக்காந்து தின்றால் குன்றும் மாளாதாம். எப்படி? (3)
9 இவன் கணக்கு பார்த்தா உழக்குக் கூட மிஞ்சாதாம். யாரிவன்? (5)
11 ஆடிக் காத்திலே _____________யும் பறக்குமாம்.(3)
18 அரை வைத்தியனாவதற்கு இதில் ஆயிரத்தைக் கொன்றிருக்க வேண்டுமாம். அது என்ன? (2)
வலமிருந்து இடம்
8 இதை எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி விடுகிறான். (2)
13 ___________ மீன்களுக்கு நீந்தவா கத்துத் தரணும்? (3)
17 உலகமறியாமல் இருப்பதை, குண்டுச் சட்டிக்குள் ________ ஓட்டுவது போலன்னு சொல்லலாம். (3)
மேலிருந்து கீழ்
1 இவன் அன்றே கொல்வானாம். ஆனால் தெய்வம் நின்று கொல்லுமாம். யாரிவன்? (4)
4 மிக மிகச் சிக்கனமானவர்களை, ‘கடைந்த மோரில் ______________ வெண்ணை எடுப்பவன்’ என்று சொல்வார்கள். (4)
5 கவனக் குறைவாக இருப்பதை “ ___________ தரையிலே ; தவிடு பானையிலே” என்று சொல்வார்கள். (4)
9 _______________ சுருக்குவது பெண்டிர்க்கு அழகு. (3)
11 ராமனைப் போல அரசன் இருந்தாலும் இவரைப்போல சேவகன் வேண்டும் என்கிறார்கள். யாரிவர்? (4)
12 நல்ல மாட்டுக்கு ஒரு __________. (2)
கீழிருந்து மேல்
8 தாயைப் போல பிள்ளை என்று சொல்வதைப் போல இவரைப் போல புதல்வன் என்று சொல்கிறார்கள். யாரிவர்? (3)
9 __________ வாயை மூடலாம். ஊர் வாயை மூட முடியாது. (2)
10 உப்பைத் தின்னவன் _____________ குடிக்கணும். (3)
13 கைப்புண்ணைப் பார்க்க ___________________ அவசியமா? (4)
14 ___________ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்களாம். (3)
15 இவனுக்கு, புல்லும் ஆயுதமாம். யாரிவன்? (5)
16 ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது ___________ களாம். (3)
19 ___________ சுரைக்காய் கறிக்கு உதவாதாம். (3)