குறுக்கெழுத்து – பழமொழி
இடமிருந்து வலம்
- தலை சாய்க்க மடி தரும் பஞ்சு நண்பன். யார் அவன்? (4)
- தண்ணீரில் பிறந்தாலும், தண்ணீரினால் மடியும். அது என்ன? (3)
- இரண்டு பக்கமும் காடு ; நடுவிலே ஒரு பாதை. அது என்ன? (3)
- ஊரெல்லாம் சுற்றினாலும் வீட்டுக்குள் மூலையில் முடங்கும். அது
என்ன? (4)
- ஊர் உண்டு மக்களில்லை; மலையுண்டு மரங்களில்லை; ஆறுண்டு
நீரில்லை. வண்ணமுண்டு உயிரே இல்லை – அது என்ன? (5)
12.வாயில் கடிபடாது. கையில் பிடிபடாது. அது என்ன? (4)
16.ஊசிக்கு ஒண்ணு, மனுஷனுக்கு ரெண்டு. அது என்ன? (2)
17.ஆழ்கடலில் பிறந்தாலும் ஆரணங்கை அலங்கரிப்பேன். நான் யார்? (3)
20.பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள். அது என்ன? (6)
வலமிருந்து இடம்
- உடம்பெல்லாம் பல்லிருந்தாலும் கடிக்காது. அது என்ன? (3)
- எவர் கையிலும் சிக்காத கல், எங்குமே விற்காத கல். தண்ணீரில்
மறையும் கல். அது என்ன? (4)
- வெயிலில் காய்ந்து, மழையில் நனைவான். அவன் சுருங்கினால்
நம்கையில் அடங்குவான். விரிந்தால் நம்மை அடக்குவான். யார்
இவன்? (2)
மேலிருந்து கீழ்
- பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது
என்ன?
- சொன்னதைச் சொல்லும் பெண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம்
அவள் யார்? (2)
- நூல் நூற்கும் ; ராட்டை அல்ல. வலை பின்னும் மீனவன் அல்ல. இவன்
யார்?(4)
- குழந்தைக்குப் பலமான கையே இந்தக் கைதான். – அது என்ன? (3)
- வெள்ளைக் கிண்ணத்தில் மஞ்சள் ராணி தைலத்தில் குளிக்கிறாள். (3)
- ஊரெல்லாம் ஒளி தரும் விளக்கு. ஒரு நாள் ஓய்வெடுக்கும் விளக்கு..
அது என்ன? (3)
- படுத்தால் விரிந்து நின்றால் சுருங்கும். அது என்ன? (2)
கீழிருந்து மேல்
- வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன? (4)
- கறுப்பர் ஆட்சிக்குப்பின் வெள்ளையன் இவனது ஆட்சி தான். யார்
இவன்? (2)
- தண்ணியில்லாப் பொட்டலிலே சுமந்து அலையும் கப்பல்.அது என்ன?(5)
- உடம்பில்லாத ஒருவன் பல சட்டைகள் அணிந்திருப்பான். அவன்
யார்? (5)
- பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் மிதக்குது. அவை என்ன? (4)