சிறுகதை போட்டி
பல்லாயிரம் ஆண்டுகளாக கதைகள் சொல்லியும் கேட்டும் வளர்ந்தவர்கள் தமிழர்கள். உலகமெலாம் அதி நவீனம் ஆக்கிரமித்திருந்தாலும் அறைக்குள் அமர்ந்து கதை படிப்பது அலாதி சுகம்! கதை படிப்பது சுகமென்றால் ஓர் கதை வடிப்பது சுகமோ சுகம்.
நம்மில் பலரில் ஒளிந்திருக்கும் புனைவுத் திறனை புவியறிய வெளிக்கொணரும் வகையில் பனிப்பூக்கள் சஞ்சிகை சிறுகதை போட்டியினை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
பனிப்பூக்கள் நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு
கதைகள் காதல் எனும் பெரும்பிரிவின் கீழ் சமூகம், நகைச்சுவை ,வரலாறு என்று எந்த துணைப் பிரிவையும் சார்ந்திருக்கலாம்.
கீழ்க்காணும் வரி முழுமையாக கதையில் ஏதாவது ஒரு இடத்திலாவது பயன்படுத்தப்பட வேண்டும்.
“காதல்! காதல்! காதல்! வாழ்க்கையிலே இதை விட்டா வேற எதுவுமே இல்லையா?”
போட்டியில் எந்த நாட்டவரும், அனைத்து வயதினரும் பங்கு பெறலாம். கதைகள் தமிழில் இருப்பது அவசியம். ஒருங்குறியில் தட்டச்சு செய்யப்பட கதைகள் 30 KB அளவுக்கு (பனிப்பூக்கள் அச்சிதழில் 4 பக்கங்களுக்கு) மிகாமல் இருக்க வேண்டும்.
கதையுடன், உங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு எழுதி, இணைக்கப்பட்டுள்ள கதை உங்களது சொந்த கற்பனையில் உருவானதென்றும், அவை இது வரை வேறெந்த அச்சிதழுக்கோ , மின்னிதழுக்கோ, வலைப்பக்கங்களுக்கோ அனுப்பப்பட்டு, வெளியானவை அல்ல என்ற உறுதிமொழியுடன் , முழு அஞ்சல் முகவரியுடன் அனுப்ப வேண்டும்.
பனிப்பூகளுக்கு அனுப்பப்படும் கதையின் வெளியீட்டு உரிமை பனிப்பூக்களுக்குச் சொந்தமாகும். அவற்றின் எழுத்துரிமை எழுத்தாளரான உங்களிடமே இருக்கும். பரிசுக்கு தேர்வாகாத கதைகள் பனிப்பூக்களின் மின்னிதழிலோ, அச்சிதழிலோ வெளியிடப்படலாம். இதற்குச் சன்மானம் இல்லை.
கதைகளை மின்னஞ்சலில், ‘sirukathaikal@panippookkal.com’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். உங்களது கதைகள் கொண்ட கிடைக்கப் பெற்றதும், அது கிடைக்கப் பெற்றமைக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும்.
கதைகள் வந்து சேர வேண்டிய நாள்: 25th May 2015.
முடிவுகள் 15th Jul 2015 அன்று பனிப்பூக்கள்.கம ல் அறிவிக்கப்பட்டு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்.
நடுவர் குழுவின் தீர்ப்புகள் இறுதியானவை.
கற்பனைகளைக் கட்டவிழ்த்து விடுங்கள்!
கரைகளுடைத்து கதைகளவை பிறக்கட்டும்!!
வாழ்த்துகளுடன்
பனிப்பூக்கள்!