\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மன்மத வருட மாத பலன் – ஆவணி மாதம்

Filed in அன்றாடம், ஜோசியம் by on August 31, 2015 0 Comments

Astro-3_620x264

(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி, வடஅமெரிக்கப் பகுதிகளுக்காகக் கணிக்கப்பட்டுள்ளது)

தமிழ் ஆவணி மாதம்: ( ஆங்கில மாதங்கள்:  ஆகஸ்ட்-செம்டெம்பர்)

மேடம் (மேஷம்) – பெரும்புகழ் எதிர்பார்க்கலாம், உடல் சுகம் குறைவு, உணவு உட்கொளல் குன்றுதல், வியாதி பீடைகள், காய்ச்சல், மற்றும் துர்செயற்பாடுகளில் இருந்து அவதானம் தேவை, துணைவி, பிள்ளைகள் எதிர்ப்புக்களால் கஷ்டங்கள் ஏற்படலாம்,

இடபம் (ரிஷபம்) – பொருள், காசு பண இலாபங்கள் வரும், தொழிலில் முட்டுக்கட்டை ஏற்படலாம், வாழ்க்கைத் துணையிலான தடைகள் வரலாம், எதிராளிகளினால் மனப்பயம் ஏற்படலாம். இனசனக் கொண்டாட்டங்கள் நடைபெறக்கூடும். உணவினால் இன்பம்.

மிதுனம் – சந்தோசத்துடன் ஆரம்பிக்கும், எனினும் எதிராளிகள் நாசம், வாக்குக் கலகம், உடல் பித்தம் ஏற்படலாம். மாதத்தின் பிற்பகுதியில் கால அனுகூலங்களைப் பெறலாம். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். ஆயினும் எதிராளிகள் குறித்த பயம் தொடரும்.

கர்க்கடகம் (கடகம்) – உடல் குறைதல், பொருட் சேதங்களை எதிர்பார்க்கலாம். எடுத்த காரியத்தின் கடும்முயற்சிக்கேற்ற வருமான இல்லாது போகலாம். ஆயினும் எதிரிகளை வேற்றி கொள்ளல், பெரும் மதிப்புப் பெறுதல் போன்றவற்றுக்கு அனுகூலமான மாதமிது. இம்மாதம் மரியாதையின்மையும் ஏமாற்றமும் ஏற்படலாம்.

சிங்கம் (சிம்மம்) – அதிக செலுவுள்ள மாதம். இடையூறுகள், தாழ்ந்த மனப்பாங்கை எதிர் கொள்ளலாம். உடல் நலம் குறைதல், பணக்குறைவு, பிள்ளைகளினால் குறைகள் போன்றவை ஏற்படலாம்., கால்நடைகள் பராமரிப்பின் மூலம் இலாபம் பெறலாம். அன்றாட இல்லற வாழ்க்கை சுகமாய் அமையும்.

கன்னி – நன்மதிப்பு, செய்யும் கருமங்களில் உயர்வு தாழ்வற்ற நிலைப்பாடு, ஆடைகளுக்கான செலவு. வயிற்றிலும், உடலிலும் சுகம் குறைதல். வாழ்க்கைத் துணை பிள்ளைகள் வெறுப்புக்குள்ளாகுதல் போன்றவை ஏற்படலாம்.

துலாபம் (துலாம்) – வாகன சௌகரியம், உடல் நிலைச் சிறப்பு, பொருள், பண வருமானம் போன்ற நன்மைகள் உருவாகலாம். சிலருக்கு இடையறாத கவலைகள், குடல், வாயு வெளியேற்ற சிரமங்கள் தோன்றலாம். முன்னர் ஏற்பட்ட வெற்றியினால் வேலையில் ஒரு தானத்தைப் பெற்றுக் கொள்ளும் நிலை வரலாம்.

விருச்சிகம் – உடல் சுகக் குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு, பெண்ணினால் பயன் பெறுதல், பெண்ணினால் இடம் பெறுதல். கால்நடைகளினால் இலாபம் போன்றவை சாதகமாகும். பொருட்சேதமும் ஏற்படலாம்.

தனு – செய்யும் காரியத்தில் திறமை காட்டுதல், கொடை, தரும காரியங்களில் சித்தியடைதல், பொதுமக்கள் மதிப்பைப் பெறுதல் போன்ற சாதகங்களும். கொடுக்கல் வாங்கல் தலையிடிகள், வாக்குவாதம், மற்றும் வீண் பழியும் சுமத்தப்படுதல் போன்ற பாதமான விடயங்களும் தோன்றலாம். பிறருக்குக் கீழ்ப்படும் நிபந்தனைகளும் உருவாகலாம்.

மகரம் – நல்ல வெற்றிக்கு வாய்ப்பு உண்டு, காரியச் சிரமங்கள், உடல் சுகங்குறைவு. தொற்று நோய்,

மற்றும் தேவையற்ற பயம் போன்ற பாதகமாக சூழ்நிலைகள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு. அதிகார முயற்சிகளில் வெற்றி பெரும் சந்தர்ப்பமும். பிறராலும் பயன் கிட்டும் நிலையும் ஏற்படலாம்.

கும்பம் – சற்றுத் தீய குணமுள்ள சகபாடிகளால் கடின நிலையுள்ளாகுதல். மற்றும் மனக்கவலை உருவாவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். அவதானமாக இருந்து கொள்ளவும், காயங்கள் ஏற்படலாம். மாத இறுதியில் வாக்குக் கலகமும், பின்னர் பயம் தீரலும் ஏற்படும்.

மீனம் – இருந்த வருத்தம் மாறும். அதிகக் கோபத்திற்கு உள்ளாகலாம். பொருள் நட்டங்கள் ஏற்படினும் மாத இறுதியில் சகலபாக்கியங்களும் திரும்ப வரப் பெருவீர்கள். நல்ல முயற்சிகளும் பயனற்றவை ஆகுவதற்கும் . மனக்கவலை அதிகரிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது, உணவு உட்கொள்ளல் குன்றுவதற்கு வாய்ப்பு அதிகம்.

– பரீட்சார்த்த தொகுப்பு பனிப்பூக்கள் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad