எசப்பாட்டு – இரண்டாம் காதல்
உசுருக்கு உசுரா ஆச வச்சோம்
உறவா மாறிப்போக ஆச வச்சோம்
உடனே சேந்துவாழ ஆச வச்சோம்
உடலு வேற உயிரொண்ணுனு ஆச வச்சோம்
உலகம் சுத்திவர ஆச வச்சோம்
உலவும் தென்றலாக ஆச வச்சோம்
உணர்வாய் ஒன்றுசேர ஆச வச்சோம்
உயிரைப் பெத்தெடுக்க ஆச வச்சோம்
உருண்டு காலமோட ஊர்கள் மாறிப்போக
உலரும் ஈரம்போல உறவும் தூரப்போக
உயிரும் போகமலே உணர்வும் மாறிப்போக
உலகில் தொடர்ந்துவாழ உருவான இன்னொண்ணோட
உசிரும் உசிராக ஆச வச்சோம் !!!
– வெ. மதுசூதனன்.
ஆணும் பொண்ணும் சேந்துவாழும் நீதி வெச்சான்
ஆஸ்திக்கொண்ணு ஆசக்கொண்ணுன்னு பேசி வெச்சான்
ஆஸ்தி மெச்சும் அகிலமிது அசட்டு மச்சான்
ஆசவெச்சு நீயும் கண்டதென்ன சொல்லு மச்சான்!
ஆயிஅப்பன் தெய்வமுன்னு எவனெவனோ எளுதி வெச்சான்
ஆருஉன்ன பெக்கச்சொன்னான்னு மூத்தவனும் கேட்டு வெச்சான்
ஆகாசக்கோட்டை கட்டி அரசாளும் அரும மச்சான்
ஆதர்ச வாக்கயது வெலகிப்போகும் கானல் மச்சான்!
ஆறாம்மாசம் சுமக்கையிலே அடிமடியைக் கனக்க வெச்சான்
ஆதரவா அணைக்கையிலே கழுத்தோரம் கடிச்சு வெச்சான்
ஆலவிழுதா தாங்குவான்னு காத்திருந்த நேச மச்சான்
ஆலையிலே பிழிஞ்செறிஞ்ச கரும்பெனவே ஆனோம் மச்சான்.
ஆசைவலை ஆளை அமுக்கும் ஆழியலை மச்சான்!!
– ரவிக்குமார்.
Tags: love