உலகச் செம்மொழி – அத்தியாயம் 18
(அத்தியாயம் 17 செல்ல இங்கே சொடுக்கவும்)
அரபிய தீபகற்பத்தின் வடபகுதியில் தான் நாகரிகத்தில் உச்சம் தொட்ட சுமேரிய நாகரீகம் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. இது இன்றைய இராக் நாடாகும். இங்குதான் யூஃப்ரடீஸ் மற்றும் சின்னார் என்று அழைக்கப்படுகின்ற டைக்ரஸ் நதிகள் ஓடுகின்றன.
இவ்விரு ஆறுகளும் இப்பகுதியை வளம் கொழிக்கச் செய்கின்றன. அக்காடிய மொழியில் யூஃப்ரடீஸ் ஆற்றை இப்-புரத்து ஆறுஎன அழைத்தனர். இந்தப்பக்க ஆறு அந்தப்பக்க ஆறு என்பதை இப்புரத்து ஆறு அப்புரத்து ஆறு என்று குறிப்பிடப்பட்டது. இதே ஆற்றைப் பழைய பாரசீக மொழியில் உஃபராத்து என அழைத்தனர்.
பின்பு அதே பாரசீக மொழியில் ஃப்ரட் ஆகியது, இவ்வாறு துருக்கிய மொழியில் ஃபிரட் என்றும் அழைக்கப்பட்டது. இப்புரத்து என்ற தமிழ் வார்த்தையே யூப்ரடீஸ் என்று இன்றும் அழைக்கப்படுகின்றது.மற்றொறு ஆறான டைகரிஸ் ஒப்பிட்டு அளவில் சிறியது அதனால் இது சின்னார் என்று அழைக்கப்படுகின்றது.
இதே பகுதியில் பேசப்படுகின்ற அராமை மொழியே ஏசுக்கிருஸ்து பேசிய மொழியாகும். ஏசுக்கிருஸ்துவின் கடைசி வசனங்களாகப் பதியப்பட்டிருக்கும் கீழ்க் கண்ட வரிகள் தமிழில் சொல்லப்பட்டது போலவே உள்ளது எனத் தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எலேய் எலேய் லாமா சாவ தா நீ..
இயேசு பிரான் சிலுவையில் அரையப்பட்டிருந்த பொழுது , இரத்தம் சிந்திய பின் மேலே உள்ள வசனத்தைச் சொன்னதாகக் கூறப்படுகிறது.. ”கடவுளே கடவுளே சாவைத் தா நீ எனக்கு” என்று கேட்பதாக உள்ளதாம்.
அரேபிய தீபகற்பத்தில் இருந்து நாம் இப்போது ஆப்பிரிக்க பூமிக்குள் செல்ல இருக்கின்றோம். தமிழ் என்றால் முருகா என்றும் தமிழர் பெருந்தெய்வம் முருகா என்றும் போற்றப்படும் அல்லவா?அம்முருகனையே பெருந்தெய்வமாக வழிபடும் மக்களும் தம் பிள்ளைகளுக்கு முருகு என்று பெயர் சூட்டும் ஆப்பிரிக்க மக்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
தொடரும்..
-சத்யா-